in

ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி இலக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தகவல்

ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் பனை விதைகள் சேகரிக்கும் பணி, மாணவ மாணவிகள் பங்கேற்பு, ஐந்து லட்சம் பனை விதைகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடுவதற்கு இலக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தகவல்

தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் கல்லூரி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் காத்தான்சாவடி பகுதியில் கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், சமூக ஆர்வலர்கள் மூலம் பனை விதைகள் சேகரிப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர்,மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே 1 இலட்சம் பனை விதைகளை சேகரித்துள்ளனர்.

நமது மாவட்டத்தில் குறைந்தபட்சம் நாம் 5 இலட்சம் மரங்களையாவது நட வேண்டும். இதன் முன்னெடுப்பாக தற்போது பனை விதைகள் சேகரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.

What do you think?

மயிலாடுதுறை மாவட்ட குறுவட்ட போட்டிகளில் தருமபுரம் ஆதீன பள்ளி மாணவ, மாணவிகள் 74 பேர் பதக்கம் ஆதீன மடாதிபதி நேரில் வாழ்த்து

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 25-09-2024