in

களக்காட்டில் சுகாதார நிலையங்கள் இடிப்பு எஸ்டிபிஐ கண்டனம்

களக்காட்டில் சுகாதார நிலையங்கள் இடிப்பு எஸ்டிபிஐ கண்டனம்

நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபி.ஐ கட்சியின் பொதுசெயலாளர் மீராஷா களக்காட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:

களக்காடு நகரம் பேரூராட்சியாக செயல்பட்டு வந்த நிலையத்தில் கடந்த 2020 ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக களக்காடு உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனால் சிறுகுறு விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். அது மட்டும் அல்லாமல் அண்ணா சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு மருந்து வாங்கும் கூடம் இருந்தது அதை நகராட்சி நிர்வாகம் வணிக வாளகம் கட்டுவதாக கூறி இடித்து விட்டனர்.

அதே போல் தம்பிதோப்பு சிங்கம்பத்து வாட்டர் டேங் அருகில் உப்பாறு பகுதியில் செயல்பட்டு வந்த அரசு துணை சுகாதார நிலையத்தை பொது பணித்துறை இடித்து விட்டு மீண்டும் கட்டுவதற்காக இருந்த நேரத்தில் நகராட்சி நிர்வாகம் வனிக வளாகம் கட்ட அந்த இடத்தை பயன்படுத்தி விட்டார்கள் மக்கள் நலன் சார்ந்த எந்த நல்ல செயல்களையும் செய்யாமல் வியாபார நோக்கிலே நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

களக்காடு பகுதியை சுற்றி அனைத்து பகுதியிலும் அடித்தட்டு மக்களே அதிகம், இந்த அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை இல்லாமல் பெருமளவு ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர்.

நகராட்சி நிதியில் இருந்து நகர்புற சுகாதார நிலையம் கட்டுவதற்கு எந்த முயற்சியும் இது வரை எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என்ற ஐயம் இருந்து வருகிறது.

மேலும் எந்த விதமான தொழிற்சாலையும் இங்கு இல்லை ஆனால் சமானிய மக்களின் வீட்டுவரி, சிறுகுறு வியாபரிகளின் கடை வரி மட்டும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே பொதுமக்களுக்கு தேவையான நகர்புற சுகாதார துணை நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடித்த சுகாதார நிலையத்தை மீண்டும் விரைவில் கட்டிட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் நகர தலைவர் பக்கீர் முகைதீன், நகர செயலாளர் காஜா முகைதீன், செயற்குழு உறுப்பினர் கமாலுதீன், ஷபிக், அசாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 25-09-2024

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே ஆயிரக்கணக்கான திமுகவினர் உற்சாக வரவேற்பு….