in

சர்வதேச காதுகேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினம் அனுசரிக்கப்பட்டது

சர்வதேச காதுகேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினம் அனுசரிக்கப்பட்டது

 

நாகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச காதுகேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினம் அனுசரிப்பு; 5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச காதுகேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசால் விலையில்லாமல் வழங்கப்படும் காதொலி கருவியும், செயற்கை அவயம் வேண்டி பெறப்பட்ட மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 07 நபர்களுக்கு நவீன செயற்கை அவயம் என 17 நபர்களுக்கு ரூ. 5,15,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கி சர்வதேச காதுகேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினம் அனுசரிக்கும் விதமாக கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர், செவித்திதிறன் பாதிக்கப்பட்டோருக்கான உயர்நிலை சிறப்புப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

What do you think?

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு மண்டல அபிஷேக 20-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

வீடுகளை இடிக்க எதிர்ப்பு குழி தோண்டி ஜீவசமாதி அடையும் நூதன போராட்டம்