in

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 26-09-2024

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 26-09-2024

 

வெடிக்கும் சரக்குகள் நிரம்பிய ரஷ்ய கப்பல் லண்டனில் நுழைவதற்கு முயற்சி மூடுகிறது. சேதமடைந்த ரஷ்ய MV ரூபி 20,000 டன்கள் வெடிக்கும் அம்மோனியம் நைட்ரேட்டை சுமந்து கொண்டு இப்போது கென்ட் கடற்கரை மற்றும் ஆங்கில கால்வாக்கு அருகில் உள்ளது. லண்டனில் இருந்து 1 மைல் தொலைவில் ‘நங்கூரமிட்டு’ ஆங்கிலக் கால்வாயை நோக்கி வந்து கொண்டிருகிறது, பால்டிக் கடலுக்குள் நுழைய அனுமதி கேட்ட போது பாதுகாப்பு காரணமாகவும் மக்களிடையே ஏற்பட்ட பதடத்தின் காரணமாக, துறைமுகத்தை விட்டு வெளியேற டேனிஷ் அதிகாரிகளால் உத்தரவிடபட்டதால் தற்போது பிரித்தானியா துறைமுகத்தை அணுகியுள்ளது.

இளவரசி டயானா இறந்த பிறகும் அரசு குடும்பத்திற்கும் தனது மகன்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறார். இவர் 1997 ஆம் ஆண்டு எகிப்திய நாட்டு திரைப்பட தயாரிப்பாளர் டோடி என்பவரை காதலித்தார். அவரின் தந்தை முகமது ஃபயத் (Mohamed Fayed) பல பெண்களை சீரழித்ததாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. டயானா …வின், காதலரின் தந்தையால் அவரது மகன்கள் ஹாரிக்கும், வில்லியம்கும் அவ பெயரை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஜெர்மனியில் யூரோபா லீக் போட்டிக்கு ஆயுதங்களுடன் வந்த லாசியோ ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர், இத்தாலிய கிளப் ஹாம்பர்க்கில் டைனமோ கிவ் விளையாடியதால் சுமார் 60 ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியே அனுப்பியதாக ஜெர்மன் போலீசார் தெரிவித்தனர். இத்தாலிய கால்பந்து கிளப் லாசியோவின் ஆதரவாளர்கள் ஹாம்பர்க்கில் டைனமோ கிவ்வுக்கு எதிரான யுஇஎஃப்ஏ யூரோபா லீக் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது, டவுன்ஹால் அருகே போலீஸ்சை தவிர்க்க முயன்ற ரசிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனை …இக்கு பின்னர் மைதானத்திற்குள் அனுமதிக்கபட்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உக்ரைனுக்கு சுமார் 8 பில்லியன் டாலர் இராணுவ உதவியை வழங்கியுள்ளார், அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், ரஷ்யாவிற்கு எதிரான “இந்தப் போரில் வெற்றிபெற” உக்ரைனுக்கு உதவுவதற்காக $8 பில்லியனுக்கும் அதிகமான இராணுவ உதவியை அறிவித்துள்ளார் . இந்த உதவியில் 130 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய, ஜாயின்ட் ஸ்டான்டாஃப் வெப்பன் எனப்படும் சறுக்கு வெடிகுண்டுகள் அதிக துல்லியத்துடன் இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட இந்த வெடிகுண்டு, போர் விமானங்களில் இருந்து வீசக்கூடியது.

What do you think?

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் தவழும் குழந்தையாக இருந்து வருகிறார் – செல்வகணபதி கடும் விமர்சனம்

கலைஞர் மு. கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்