in

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது

 

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது…

நினைத்தாலே முக்தி தரும் சலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகின்ற டிசம்பர் நான்காம் தேதி அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் நிறைவு நாளான டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் திருக்கோவில் கருவறையின் முன்பு நான்கு மணிக்கு வருணி தீபமும் அதனை தொடர்ந்து மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தீபத் திருவிழாவிற்காக திருக்கோவிலில் உள்ள பூர்வாங்க பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த 23ஆம் தேதி திருக்கோவில் ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து திருக்கோவிலில் தீபத் திருவிழாவிற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை கோவை ஈரோடு சங்ககிரி வேலூர் விழுப்புரம் தர்மபுரி புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 450 க்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் தன்னார்வலர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக திருக்கோவிலில் உள்ள தங்க கொடிமரம், பலிபீடம், பெரிய நந்தி, சிறிய நந்தி, திருக்கோவில் மதில் சுவர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் பீச்சு அடித்து தூய்மைப்படுத்தும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் திருக்கோவிலில் பூர்வாங்கப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

What do you think?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத உண்டியல் காணிக்கை

9 மாதங்களில் 3712 புகார்கள்….இணைய வழியே 35 கோடி ரூபாய் மோசடி… 9 கோடி பறிமுதல்..