in

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்படும்… முதலமைச்சர் ரங்கசாமி

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்படும்… முதலமைச்சர் ரங்கசாமி

 

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்படும்…முதலமைச்சர் ரங்கசாமி.

டெங்கு நோய் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ மனைகளில் போதிய மருந்துகள் உள்ளது என கூறினார்.

புதுச்சேரி சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினவிழா புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் துவங்கியது. இதில் சிறப்மு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதில் சுற்றுலா துறை அமைச்சர் லஷ்மிநாராயணன், சபாநாயகர் செல்வம், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, தலைமை செயலர் சரத் சௌகான், சுற்றுலாதுறை செயலர் ஜெயந்த குமார், சுற்றுலா துறை இயக்குநர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள், கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் உலக சுற்றுலா தினத்தில் ஆன்மீக சுற்றுலா அதிகரிப்பதால் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த இடங்கள் குறித்த குறிப்பு கையேட்டை துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் வெளியிட்டனர்.

தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சி மிகவும் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருவதாகவும், வாரத்தில் 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் வருகையால் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரூம்கள் கிடைப்பதில்லை. அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இப்பொழுது 5 நாட்களாக இது அதிகரிக்கிறது என்றும், புதுச்சேரி ஒரு ஆன்மீக பூமி, அரவிந்தர் மட்டுமல்லாமல் எத்தனையோ சித்தர்கள் இங்கு வந்துள்ளார்கள். புதுச்சேரியில் பொழுதுபோக்கு, ஆன்மீகம், அழகிய கடற்கரை உள்ள அமைதியான அழகான மாநிலம் புதுச்சேரி என்றார்.

மேலும் அனைத்து வசதிகளையும் கொண்டு வந்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பது எங்களது எண்ணம். பழமையான கட்டிடங்களை பாதுகாக்க வேண்டியது அரசின் எண்ணம். அதற்கான நிதியுதவிகளை அரசு கொடுத்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருவதால் கலாச்சார பறிமாற்றம் ஏற்படுகிறது. அதனால் ஒரு நட்புறவு ஏற்படுகிறது என பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் ரங்கசாமி, டெங்கு போன்ற காய்ச்சல் நோய்களை கட்டுப்படுத்த முழு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் உள்ளன. கடந்த ஆண்டை விட புதுச்சேரி காய்ச்சல் குறைவாக உள்ளது என்றார். மத்திய அரசு புதுச்சேரிக்கு தேவையான நிதி மற்றும் உதவிகளை செய்து வருகிறது தொடர்ந்து செய்யும் என நம்பிக்கை தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

What do you think?

9 மாதங்களில் 3712 புகார்கள்….இணைய வழியே 35 கோடி ரூபாய் மோசடி… 9 கோடி பறிமுதல்..

நாங்குநோி பெருமாள் திருக்கோவிலில் மனவாளமாமுனிகளின் பிரதான சீடரும்