in

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில்பட்டமளிப்பு விழா….

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில்பட்டமளிப்பு விழா….

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. 

கல்லூரி சேர்மன் அருண்குரியன் ஜோசப் வரவேற்க்க, முதல்வர் டாக்டர் ரேணு முன்னிலை வகித்தார்.

பதிவாளர் அனில் பூர்த்தி ஆண்டறிக்கை வாசிக்க, சிறப்பு விருந்தினராக வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் கலந்து கொண்டு இளங்கலை பிரிவு 162 பேருக்கும் முதுகலை பிரிவு 45 பேருக்கும் பட்டங்களை வழங்கி பேசுகையில், புதிய பயணத்தில் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நினைவில் கொள்ள வேண்டும்.. மேலும் கற்று கொள்ள வேண்டிய சவாலான விஷயங்கள் நிறைய உள்ளன.

அதனை பொறுமையாக கையாள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பின்னர் மருத்துவ மாணவ மாணவியர் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் தலைமையில் மருத்துவ நெறிமுறைகள் குறித்து உறுதி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் பல்வேறு பாடப் பிரிவுகளில் பல்கலைக்கழக அளவில் வெற்றி பெற்ற இளங்கலை, முதுகலை மாணவ மாணவியருக்கு பதக்கங்
களையும் சான்றினையும் பேராசிரியர் விக்ரம் மேத்யூஸ், கல்லூரி சேர்மன் அருண்குரியன் ஜோசப், வழங்கினர்.

பின்னர் 2024 ஆம் ஆண்டின் சிறந்த மாணவி கிருத்திகா மற்றும்
ஆல்ரவுண்டர் ஆக தேர்ச்சி பெற்ற விஸ்வேஷ், விளையாட்டு துறையில் சிறந்த மாணவி தனஶ்ரீ ஆகியோர் கவுரவிக்க பட்டனர். விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் டாக்டர் நிஷாந்த் நன்றி கூறினார்..

What do you think?

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் டெங்கு மலேரியா காய்ச்சல்

கோவிலுக்கு செல்லக்கூடிய பொதுபாதையை ஆக்கிரமித்து கார் செட் அமைத்த தனிநபர்