in

அதிமுக முன்னாள் அவைத் தலைவர் மறைந்த பாண்டுரங்கன் பிறந்தநாள் விழா

அதிமுக முன்னாள் அவைத் தலைவர் மறைந்த பாண்டுரங்கன் பிறந்தநாள் விழா

புதுச்சேரியில் மறைந்த அதிமுக முன்னாள் அவைத் தலைவர் பாண்டுரங்கன் பிறந்தநாள் விழாவில் பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமையில் ஏழை எளிய மாணவர்கள், மக்களுக்கு சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாநில செயலாளர் அன்பழகன் வழங்கினார்.

புதுச்சேரி அதிமுக முன்னாள் அவைத் தலைவர் மறைந்த பாண்டுரங்கன் பிறந்தநாள் விழா அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதி பிரம்மன் சிலை அருகில் நடைபெற்றது.

மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில கழக செயலாளர் அன்பழகன், அம்மா பேரவை செயலாளரும், முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு ஏழை எளிய மாணவர்களுக்கு விலைமதிக்கத்தக்க ஐந்து சைக்கிள்களும், ஏழை சலவை தொழிலாளி மூன்று பேருக்கு சலவைப் பெட்டியும் மற்றும் ஏழை எளியவருக்கு மூன்று தையல் மெஷின் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டிஜிட்டல் கைக்கடிகாரம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சேலையும் வழங்கப்பட்டது.

மேலும் தொகுதி கழக நிர்வாகிகளுக்கும் அதிமுக உரிமை உறுப்பினர் கார்டும் வழங்கப்பட்டது. தொகுதி கழக செயலாளர் ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம், நகர கழக செயலாளர் அன்பழக உடையார், முன்னாள் எம்எல்ஏ ராஜாராம், மாநில இணை செயலாளர் வீரம்மாள், மாநில துணை செயலாளர் நாவுக்கரசு, பி எல் கணேசன், குமுதன், அம்மா பேரவை செயலாளர் சுத்துகேனி பாஸ்கர், மாநில துணை செயலாளர், கணேசன், கிருஷ்ணமூர்த்தி, நாகமணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, தொகுதி தலைவர் ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

What do you think?

கோவிலுக்கு செல்லக்கூடிய பொதுபாதையை ஆக்கிரமித்து கார் செட் அமைத்த தனிநபர்

திருச்சி எஸ்.பி.வருண்குமார் மீது நடவடிக்கை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேட்டி