in

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி யோகா ஆசிரியை 5 டன் எடை கொண்ட மினி பேருந்தை தனது இரு விரல்களை ஆயுதமாகக் கொண்டு 250 மீட்டர் இழுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்…

வெகுவாக பாராட்டிய கிரிவல பக்தர்கள்..

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராமத்தில் உள்ள குபேரநகர் பகுதியில் வசித்து வருபவர் யோகா ஆசிரியை கல்பனா.

பெண் பிள்ளைகள் பாதுகாப்பு குறித்தும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு யோகாசன விழிப்புணர்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ராஜராஜேஸ்வரி திருக்கோவில் அருகே யோகா ஆசிரியை கல்பனா

பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் 5 டன் எடை கொண்ட மினி பேருந்தை தனது இரு விரல்களால் (ஆள்காட்டி மற்றும் நடு விரல்களால்) கயிறு கட்டி சுமார் 250 மீட்டர் இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பெண்களால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் கிரிவலப் பாதையில் தனது இரு விரல்களை ஆயுதமாக பயன்படுத்தி 5 டன் எடை கொண்ட மினி பேருந்தை இழுத்துச் சென்ற யோகா ஆசிரியையை கிரிவலம் சென்ற பக்தர்களை கவர்ந்ததால் கிரிவலம் சென்ற பக்தர்கள் அவரை உற்சாகப்படுத்தியதுடன் அவருடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

What do you think?

பிரிஞ்சிட்டா… குற்றம் சொல்லி அசிங்கப்படுத்திகனுமா… இயக்குனர் மிஷ்கின் கேள்வி

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 28-09-2024