in

அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் புரட்டாசி சனிக்கிழமை இரண்டாம் வாரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம்

புண்ணியம் தரும் புன்னைநல்லூர் கோதண்டராமர்

அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் புரட்டாசி சனிக்கிழமை இரண்டாம் வாரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம்

தஞ்சாவூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம், கோதண்டராமர் திருக்கோயில். இந்தக் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர், சாளக்ராமம் எனும் கல்லால் ஆனவர். இது வேறெங்கும் காண்பதற்கு அரிதான ஒன்று சொல்லி சிலாகித்துப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.

கி.பி.1739-1763 இல் இக்கோயில் கட்டப்பட்டது. நேபாள மன்னர் ஒருவரால் தஞ்சாவூர் மன்னருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட சாளக்கிராமக் கல்லினால் ஆன சிலைகள் கருவறையை அலங்கரிக்கின்றன. கோதண்டராமர், சீதா, லட்சுமணர், சுக்ரீவரோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் முக்தி தரும் தலம் எனப் போற்றுகின்றனர். ஸ்ரீகோதண்டராமரை தரிசித்தால், பிறவிப் பயனை அடையலாம். காரியங்கள் யாவும் தடையின்றி நிகழும். பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

ராம நவமி நன்னாளில் கோதண்டராமரை வணங்குங்கள். மாதந்தோறும் நவமியிலும் புனர்பூச நட்சத்திர நாளிலும் இங்கு வந்து வேண்டிக் கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் புன்னைநல்லூர் கோதண்டராமர்.இக்கோயிலில் இன்று புரட்டாசி இரண்டாம் வார சனிக்கிழமையை முன்னிட்டு சீதாதேவி சமேத ஶ்ரீ கோதண்டராமர்,
லெட்சுமணன், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு ராமபிரானை தரிசனம் செய்தார்கள்.

What do you think?

டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக சுல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை

தஞ்சை மாவட்டத்தில் ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோவில் புரட்டாசி மாத இரண்டாம் வார சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்