in ,

அருகன்குளம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஜடாயு தீர்த்த படித்துறையில் ஸ்ரீ ராம பாதகமல பூஜை

அருகன்குளம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஜடாயு தீர்த்த படித்துறையில் ஸ்ரீ ராம பாதகமல பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

நெல்லை மாவட்டம் அருகன்குளம் தாமிரபரணி நதிக்கரையில் பழமை வாய்ந்த ஸ்ரீ காட்டு ராமர் திருக்கோவில் அமைந்துள்ளது இங்கு ராமாயணத்தில் வரும் ஜடாயு பறவைக்கு ராமபிரான் திருமண கோலத்தில் காட்சி தந்து மோட்சம் அடையச் செய்ததாக வரலாறு உண்டு. இந்தத் திருத்தலத்தில் புரட்டாசி மாத 2ம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் காலை முதல் நடைபெற்று வருகிறது

அதன் ஒரு பகுதியாக அருகன்குளம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஜடாயு படித்துறைக்கு காட்டு ராமர் திருக்கோவிலில் இருந்து சீதாபிராட்டி சமேத ராமபிரான் தம்பி லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் தோளுக்கினியன் பல்லக்கில் செண்டை மேளம் முழங்க பக்தா்களின் ராம நாம கோஷங்களோடு எழுந்தருள செய்தனா்.

அதனைத் தொடர்ந்து ஜடாயு படித்துறையில் ஸ்ரீ ராம பாத கமல பூஜை நடைபெற்றது. பின்னர் தாமிரபரணி நதிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீ ராம பாத கமலத்திற்கு திருமஞ்சனமும் அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது.

பின்னர் தாமிரபரணி நதியிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு தோளுக்கிணியானில் எழுந்தருளிய சீதா பிராட்டி சமேத ராமர் லக்ஷ்மண,ஆஞ்சநேய சுவாமி முன் வைத்து பூஜைகள் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது நெல்லையில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை.வைகோ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி 2 வது சனிக்கிழமை கருடசேவை புறப்பாடு