in ,

சாத்தூர் அருகே திடீர் பட்டாசு வெடி விபத்து சுமார் 10 கிலோ மீட்டருக்கு அதிர்வுகள்

சாத்தூர் அருகே திடீர் பட்டாசு வெடி விபத்து சுமார் 10 கிலோ மீட்டருக்கு அதிர்வுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிழ ஒட்டம்பட்டியில் திருமுருகன் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலை சிவகாசி அருகில் உள்ள விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமானது. இங்கு
நாக்பூர் உரிமம் பெற்று சுமார் 25க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சிராக பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கம் போல இன்று பட்டாசு தயாரிக்கும் பணிக்காக மருந்து கலவை தயாரிக்கும் பணியில் இங்கு உள்ள தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் அப்போது உராய்வினால் திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் தெரிய வருகிறது.

இந்த பட்டாசு வெடி விபத்தின் அதிர்வானது சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் அதிர்வை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அதிகாலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் அதிக அளவில் வரவில்லை என்பதாலும் உயிர் சேதம் பெரியளவில் இருக்காது என்று கூறுகின்றனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் தொழிற்சாலைக்கு உள்ளே யாரையும் அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது

மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள், சாத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் வந்திருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடித்து சிதறுவது குறைந்த பின்னரே உள்ளே சென்று என்ன நிலவரம் என்று தெரிய வரும் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

What do you think?

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தங்கத்தேர் கோவில் பிரகாரத்தின் நடுவழியில் பழுதாகி நின்றதால் பக்தர்கள் வேதனை

தெக்கூர் அருள்மிகு ஸ்ரீ உலகுடைய அம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது