in

மயிலாடுதுறை காலை முதல் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது

மயிலாடுதுறை காலை முதல் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை முதல் கனமழை, கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது, சம்பா சாகுபடிக்கு தேவையான மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பநிலை நான்கு டிகிரி வரை உயர்ந்து கோடை காலம் போல் இருந்து வந்தது இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம், மயிலாடுதுறை பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வெப்பம் மறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காவேரி ஆறு மற்றும் நிலத்தடி நீரை பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சி வந்த நிலையில் வெப்பம் காரணமாக இளம் நாற்றுகள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது மழை சம்பா சாகுபடிக்கு உகந்த மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

What do you think?

பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள்….

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிரியாணி திருவிழா