in

யாரை வேண்டுமானாலும் அமைச்சராகி கொள்ளட்டும் மக்களுக்கு எந்த அளவிற்கு பயன் அளிக்கிறது என்பதுதான் மிக முக்கியம் என நெல்லை முபாரக் தஞ்சாவூரில் பேட்டி.

யாரை வேண்டுமானாலும் அமைச்சராகி கொள்ளட்டும். ஆனால் மக்களுக்கு எந்த அளவிற்கு பயன் அளிக்கிறது என்பதுதான் மிக முக்கியம் என நெல்லை முபாரக் தஞ்சாவூரில் பேட்டி.

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில்,தமிழகத்தை பொறுத்தவரை ஒரு நிர்வாக மாற்றம் நடைபெற்று உள்ளது அவ்வளவுதான். தமிழகத்தை பொறுத்தவரை துணை முதல்வர் உள்ளிட்ட இதர பதவிகளை கொண்டு வருவேன் என அரசுக்கு வாக்களிக்கவில்லை.

எத்தனையோ வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. இதுவரைக்கும் அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகளில் பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. ஸ்டாலின் அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும். இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதாக பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் எஸ்டிபிஐ கட்சியின் வாழ்த்துக்கள்.

துணை முதல்வர் உள்ளிட்ட மாற்றத்தை செய்தாவது திமுகவை சார்ந்தவர்களுக்கு புதுமை காட்ட வேண்டிய அவசியம் தமிழக முதல்வருக்கு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அதற்காகத்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையை அவர் செய்கிறார். எதை செய்தாலும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கிறதா. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். ஆனால் இந்த ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பிருந்தே மாதந் தோறும் மின் கீட்டு முறையை கொண்டு வருவோம் என சொன்னார். இதுவரை அந்த நடைமுறைப்படுத்தவில்லை. காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

மக்களின் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. அதை செயல்படுத்த இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத்தை வேண்டுமானாலும் அவர்கள் மாற்றிக் கொள்ளட்டும். யாரை வேண்டுமானாலும் அமைச்சராகி கொள்ளட்டும். ஆனால் மக்களுக்கு இது அளவிற்கு பயன் அளிக்கிறது என்பதுதான் மிக முக்கியமானது. திமுகவின் நடவடிக்கைகள் திமுக அரசு தோல்வியுற்று அரசாகத்தான் உள்ளது.

இனி வரக்கூடிய காலங்களிலாவது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய அரசாக இருக்கும் என கருதுகிறோம்.
டாஸ்மாக்கை இழுத்து மூடு மதுவிலக்கை அமல்படுத்து என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. இதை அமல்படுத்த கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். விடுதலை சிறுத்தையின் மதுவிலக்கு கோரிக்கைக்கு நாங்கள் உடன்படுகிறோம் . ஆனால் தற்போது வரை எங்களுக்கு அழைப்பு வரவில்லை இருந்தாலும் இந்த நல்ல கோரிக்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 30-09-2024

ராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன் தடைமண்டலமாக அறிவிக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் பேட்டி