in ,

நவதிருப்பதி பெருமாள்களுக்கு குடைகள் சமர்ப்பிக்கும் 3ம்ஆண்டு யாத்திரை ஏற்பாடு

புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை (05.10.2024) உலக மக்களின் ஷேமத்திற்காகவும், பெருந்தொற்றுகளை விலக்கும் பொருட்டும், நமது ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் அவர்களின் தலைமையில், சுவாமிகள், மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள் உடன் வர நவதிருப்பதி பெருமாள்களுக்கு குடைகள் சமர்ப்பிக்கும் 3ம்ஆண்டு யாத்திரை ஏற்பாடு ஆகியுள்ளது.

சனிக்கிழமை காலை 5 மணிக்கு, ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் திருக்கோவிலில் தொடங்கி, நிறைவாக, ஆழ்வார் திருநகரி ஆதி நாதர் திருக்கோவிலில் குடையாத்திரை நிறைவு பெறும். யாத்திரையை சிறப்பாக நடத்திட ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் தலைமையில் ஆன்மீகப் பெரியவர்கள் உடன் இன்று மாலை ஆழ்வாா்திருநகாி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் மடத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டவா்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுக்கான யாத்திரையை சிறப்பானதாக நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் யாத்திரையில் ஶ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்… திருபராய்துறை… செயலர் சாமிஜீ சத்யானந்தா மகாராஜ்… திருநெல்வேலி ஶ்ரீ சாரதா மகளீர் கல்லூரி அவா்கள் கலந்து கொள்ளகிறாா்கள். பக்தா்கள் பொதுமக்கள் இந்த ஆன்மீக யாத்திரையில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் எனவும் கூறினா்.

ஆமலும் யாத்திரை நடைபெற காவல்துறை மின்சாரத்துறை இந்துசமய அறநிலையத்துறை ஆகிய அரசு துறைகளில் முறையாக அனுமதி பெற்று அவா்களின் முழு ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற முடிவு செய்ப்பட்டது.

What do you think?

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து குடத்துடன் மாநகராட்சி மன்ற கூட்டத்திற்கு வருகை தந்த கவுன்சிலர் பவுல்ராஜ்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தில் வீட்டில் வானம் தோண்டும் போது முருகன் கல் சிலை கண்டெடுப்பு