in

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தில் வீட்டில் வானம் தோண்டும் போது முருகன் கல் சிலை கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தில் ஆனந்தன் என்பவரது வீட்டில் வானம் தோண்டும் போது முருகன் கல் சிலை கண்டெடுப்பு விசாரணைக்கு பின்பு உசிலம்பட்டி துணை வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தில் உள்ள ஆனந்தன் என்பவருடைய இடத்தில் வீடு கட்டுவதற்காக வானம் தோண்டி உள்ளனர் அப்பொழுது கடப்பாரை கம்பியில் ஏதோ சாமி சிலை இருப்பது தெரிந்தது அதனை வெளியே எடுத்துப் பார்த்தபோது சுமார் ஒன்றரை அடி முருகன் கல் சிலை என்று தெரிந்தது.

தகவல் தெரிந்து அக்கிராம மக்கள் அங்கு கூடினர். பின்னர்அந்த சிலையை தண்ணீரால் அபிஷேகம் செய்து சந்தனம்,குங்குமம் வைத்து பூ வைத்து சூடம் கொளுத்தி அனைவரும் வணங்கினர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சப்இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்து கண்டெடுக்கப்பட்ட முருகன் கல் சிலையை உசிலம்பட்டி துணை வட்டாட்சியர் மணிமேகலையிடம் ஒப்படைத்தனர்.

விக்கிரமங்கலம் அருகே வீட்டிற்கு வானம் தோன்டிய போது முருகன் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

What do you think?

நவதிருப்பதி பெருமாள்களுக்கு குடைகள் சமர்ப்பிக்கும் 3ம்ஆண்டு யாத்திரை ஏற்பாடு

நாளை அக்டோபர்-1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் தகவல்