in

செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வது குறித்து, ‘யுனெஸ்கோ’ குழுவினர் ஆய்வு

செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வது குறித்து, ‘யுனெஸ்கோ’ தேர்வுக் குழு பிரதிநிதி வாஜாங் லீ மற்றும் மத்திய தொல்லியல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மராட்டிய மன்னர் சிவாஜியின் 12 மராட்டிய ராணுவ கேந்திரங்களாக இருந்தவை என்பதால் இவற்றை கலாசார ரீதியிலான உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு மத்திய அரசு பரிந்துரைத்தது.

அந்த பட்டியலில் 11 கோட்டைகள் மகாராஷ் டிராவிலும், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை யும் இடம் பெற்றுள்ளன. மராட்டியர்கள் கி.பி., 1678 முதல் 1697 வரை செஞ்சி கோட்டையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ததால், புராதன பட்டியலில் இடம் பெற்றுள்ளது.மத்திய அரசு பரிந்து ரைத்துள்ள 12 கோட்டைகளையும் யுனெஸ்கோவின் தேர்வுக்குழு பிரதிநிதி கள் பார்வையிட்டு வருகிறார்கள்.

அதன்படி நேற்று 27ம் தேதி தென் கொரியாவில் இருந்து தென்கொரியாவிலிருந்து வஜாங் லி என்பவருடன் 7 மத்திய தொல்லியல் குழுவினர் காலை 10 அளவில் வருகை புரிந்தனர்.

அவர்களை செஞ்சி எம் எல் ஏவான சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில், ஆட்சியர் பழனி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது செஞ்சி பேரூராட்சித்தலைவர் மொக்தியார் அலி, செஞ்சி ஒன்றியக்குழுத்தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

செஞ்சி கோட்டையில் இக்குழு ஆய்வு செய்வதால் இக்குழுவைத்தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை.

பிற்பகல் மக்கள் பிரதிநிதிகள், ராஜா தேசிங்கு வம்சா வழியினர் உள்ளிட்ட 30 பேருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

What do you think?

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிப்பு

துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதற்கு செஞ்சியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்