in ,

அருள்மிகு திாிபுராந்தீஸ்வரா் அருள்தரும் கோமதி அம்பாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத சோமவார பிரதோஷ வழிபாடு

அருள்மிகு திாிபுராந்தீஸ்வரா் அருள்தரும் கோமதி அம்பாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத சோமவார பிரதோஷ வழிபாடு

 

அருள்மிகு திாிபுராந்தீஸ்வரா் அருள்தரும் கோமதி அம்பாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத சோமவார பிரதோஷ வழிபாடு இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்தரும் கோமதி அம்பாள் சமேத அருள்மிகு திரிபுராந்தீசுவரர் கோயில்.

தாமிரபரணி நதி தீரத்தில் வரலாற்று பெருமையும் பழமையும் கொண்ட கோவிலாகும். இத்திருக்கோவில் கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாகள் நடைபெறுகின்றன. குறிப்பாக மாத பிரதோஷம் சிறப்பாக நடத்தப்படுகின்றது.

புரட்டாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலையில் மூலவா் சன்னதிமுன் அமைந்துள்ள நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், அரிசி மாவு, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையானபொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சந்தணத்தாலும் மலா்களால் அலங்காிக்கப்பட்ட நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. முன்னதாக ஸ்ரீ திாிபுராந்தீஸ்வரா் மற்றும் கோமதி அம்பாள் ஆகியோருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது .

நிறைவாக நந்தியெம்பெருமானுக்கு அா்ச்சனை நடைபெற்று கோபுர ஆரத்தி கற்பூர ஆரத்தி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

ஏழுமலையான் கோவிலுக்கு அபிஷேகம் (கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்)

அப்போலோ மருத்துவமனையில் திடிரென்று அனுமதிக்கபட்ட தலைவர் ரஜினிகாந்த்