in

மகாளய அமாவாசையையொட்டி திருவண்ணாமலை ஐயங்குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையையொட்டி திருவண்ணாமலை ஐயங்குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்..

ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் மகாளய அமாவாசை தினங்களில் மறைந்த முன்னோர்களுக்கு நீர்நிலைகளில், ஆற்றங்கரை ஓரங்களில், குளக்கரைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினமான மஹாலய அமாவாசை தினத்தன்று முன்னோர்களின் நினைத்து நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது நமது குடும்பத்திற்கு சிறப்பு என கருதி பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருவது வழக்கம்.

திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவில் உள்ள அருணகிரிநாதர் சன்னதி எதிரே அமைந்துள்ள ஐயங்குளக்கரையில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை தினங்களில் திருவண்ணாமலை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

அதன்படி இன்று மகாளய அமாவாசை தினமான இன்று ஐயங்குளக்கரையில் திருவண்ணாமலை சேர்ந்த ஏராளமானவர்கள் ஒன்றுகூடி இன்று காலை முதல் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணகிரிநாதர் திருக்கோவில் அருகில் உள்ள ஐயங்குளக்கரையில் தேங்காய், பழம், எள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பூஜைகள் செய்து தங்களது முன்னோர்களின் நினைவை கூர்ந்து ஏராளமானவர்கள் திதி கொடுத்து வழிபட்டனர்.

What do you think?

எனக்கும் திருமணம் ஆகிவிட்டது… ரகசியத்தை உடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தங்கமயில்

செங்கம் நகர் பகுதியில் இயங்கி வந்த பழைய இரும்பு கடை குடோனில் திடீர் தீ விபத்து