in

பயிர் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

பயிர் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.

2023 – 2024 ஆம் ஆண்டிற்கான சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் பல்வேறு முரண்பாடுகள் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை சரி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

காலதாமதமாக வழங்கப்படும் காப்பீடு தொகைக்கு உரிய வட்டியுடன் சேர்த்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும், பிரதமரின் உழவர்கள் வெகுமதி திட்டம் ஆண்டுக்கு ரூபாய் 6000 என்பதை, ரூபாய் 12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

காதி அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடக்கி வைத்தார்

வேட்டையன் Trailer…என்கவுன்ட..ரிஸ்ட்…இக்கு சட்டத்திற்கும் நடக்கும் மோதல்