வேட்டையன் Trailer…என்கவுன்ட..ரிஸ்ட்…இக்கு சட்டத்திற்கும் நடக்கும் மோதல்
அக்டோபர் பத்தாம் தேதி ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது.
வேட்டையன் படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாகவும் அவருடன் துணை காவல் கண்காணிப்பலராக ரித்திகா சிங்க் நடித்திருக்கிறார்.
லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார், வேட்டையனுக்கு அனிருத் இசையமைத்திருப்பது ஒரு பலம்.
மேலும் அவரது பின்னணி இசையும் அவரது முந்தைய படைப்புகளைப் போலவே இருக்குமா என்பதைப் படம் வந்த பிறகு தான் சொல் முடியும் இருந்தாலும் Trailer…ரில் இசையை தெறிக்கவிட்டு இருக்கிறார், ஐந்து மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 15 நிமிடங்கள் தாமதமாக ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
கன்னியாகுமரி, நாகூர், நாகர்கோவில் பகுதியை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்படிருகிறது, ஒரு குற்றச் சம்பவத்தை காவல் துறை கண்டுபிடிப்பதில் இருந்து Trailer தொடங்குகிறது.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த் சட்டத்தை கையில் எடுத்து நீதி தேடும் மனிதராக தோன்றுகிறார். ஆனால்அமிதாப் பச்சன் நீதியை நம்புகிறவர். டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் இடையே மோதல் உருவாகியுள்ளது.
ராணா டகுபதி, ஃபஹத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஃபஹத் பாசில் மற்றும் ராணா டக்குபதியின் கதாபாத்திரங்களும் டிரெய்லரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் Trailer… ரை பார்க்கும் பொழுது Jailer மற்றும் தர்பார் படங்களின் வாடை கொஞ்சம் அடிக்கிறது. அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியாக இருப்பதைவிட அதிகாரத்தை கையில் எடுப்பதில் தவறில்லை என ரஜினிகாந்த்தின் பஞ்ச்..அனல் பறக்குது, 35 வினாடிகள் ஓடிய வேட்டையன் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி 20 லட்சம் லைக் வாங்கிஇருக்கிறது.