in

அச்சரப்பாக்கம் மழை மலை மாதா 56 ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அச்சரப்பாக்கம் மழை மலை மாதா 56 ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

 

செங்கல்பட்டு மாவட்டம், மறை மாவட்டத்தின் துணை பாதுகாவலியான மழை மழை மாதா திருத்தலம் அமைந்துள்ளது.

புகழ்பெற்ற மழை மாதா தேவாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு 56 ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி அச்சரப்பாக்கம் புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து திருக்கொடி மழை மலை மாதா பங்கு சந்தை சின்னப்பர் முன்னிலையில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் எலப்பாக்கம் சாலை வழியாக திருக்கொடி நீ கிறிஸ்தவர்கள் புடை சூழ ஜெபம் செய்தபடி
திருக்கொடி ஊர்வலமாக கொண்டு சென்று திருத்தல வளாகத்தினை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து, திருத்தல வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று திருக் கொடியினை ஏற்றி வைத்தார்

அதனை தொடர்ந்து நடைபெற்ற விழா நிகழ்வில் வரவேற்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கோட்டாறு மறை மாவட்ட மேனாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

இந்த ஆண்டு திருவிழாவின் முதல் நாள் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மழை மலை மாதா வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 03-10-2024

17 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு