in

17 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு

17 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு

 

வழி நெடுகிலும் ஆரத்தி எடுத்தும் மாலைகள் அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே போகலூரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் இவர் தனது 19 வயதில் ராணுவ பணியில் சேர்ந்து தற்போது கபில்தாராக பணிபுரிந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்து சொந்த ஊருக்கு திரும்பிய ரஞ்சித்குமாரை போகலூர் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் பிரபா கார்த்திகேயன் தலைமையில் தாரை தப்பட்டைகள் முழங்க வழி நெடுகிலும் பட்டாசுகள் வெடித்து பொன்னாடை போற்றி சந்தன மாலை, மலர் மாலைகள் அணிவித்து பெண்கள் ஆரத்தி எடுத்தும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஞ்சித் குமார் அனைத்து பெற்றோர்களும் தனது பிள்ளைகள் சொகுசாக இருக்க வேண்டுமென்றால் இந்த இந்திய திருநாட்டை யார் காப்பாற்றுவார் எனவும் தனது சொந்த செலவில் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கி இளைஞர்களை ஊக்குவித்து தற்போது தனது பகுதியில் இருந்து மூன்று நபர்களை ராணுவத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய பாஜக போகலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் பிரபா கார்த்திகேயன் இளைஞர்கள் மத்தியில் தேசப்பற்று குறைந்து வருவதாகவும் அவற்றை ஊக்குவிக்கவே ஒவ்வொரு ராணுவ வீரரையும் உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகிறேன் என தெரிவித்தார்.

What do you think?

அச்சரப்பாக்கம் மழை மலை மாதா 56 ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தஞ்சையில் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி