மருத்துவமனையில் இருந்து நலமாக வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு இதயத்தில் இருந்து உடலுக்கு ரத்தத்தை எடுத்து சொல்லும் நரம்பில் வீக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவருக்கு Stant பொருத்தப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு அவரின் உடல்நிலை சீரடைந்து நேற்று மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பி உள்ளார்.
டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் வீட்டில் கட்டாய ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
ஓய்வுக்கு பிறகு மீண்டும் கூலி பட சூட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார். வீடு திரும்பிய ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் நான் மருத்துவமனையில் இருக்கும் பொழுது நான் நலம் பெற எனக்காக பிரார்த்தித்த நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றி என் மீது அளவு கடந்த நான் பாசம் வைத்து என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் எனது தெய்வமான ரசிகர்களுக்கும் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.