in

1 கோடியே 20 லட்சத்து 14ஆயிரத்து 140ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

1 கோடியே 20 லட்சத்து 14ஆயிரத்து 140ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடியில் திருவிடைமருதூர் வட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தஞ்சை மாவட்ட வருவாய் ஆய்வாளர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாமில் 1 கோடியே 20 லட்சத்து 14ஆயிரத்து 140ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருமங்கலக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நேர்காணல் சிறப்பு முகாம் நடந்தது. தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். கும்பகோணம் சார் ஆட்சியர் ஹ்றித்யா வரவேற்புரை ஆற்றினார்.

தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 15 நபர்களுக்கு 9லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 நபர்களுக்கு 7லட்சத்து நான்காயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 24 நபர்களுக்கு 11லட்சத்து 9ஆயிரத்து 687 ரூபாய் மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு 22லட்சத்து 18ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உம், மாவட்ட தொழில் மையம் சார்பில் 9 நபர்களுக்கு 69லட்சத்து 20ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் என பல்வேறு துறைகளில் 288 பயனாளிகளுக்கு 1 கோடியே 20 லட்சத்து 14 ஆயிரத்து 140 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்து, திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, ஒன்றிய துணை பெருந்தலைவர் பத்மாவதி கிருஷ்ணமூர்த்தி, திருவிடைமருதூர் பேரூராட்சி துணை பெருந்தலைவர் சுந்தர ஜெயபால், திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் கோ.க.அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜா, திருமங்கலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மினி உள்ளிட்டோர் வாழ்த்துறை வழங்கினார். மாவட்ட தனித்துணை ஆட்சியர் சங்கர் நன்றி கூறினார். திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.

What do you think?

படம் வெற்றி பெற மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்

திருமாவளவன் சொல்லித்தான் விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார் எச் ராஜா பேட்டி