in

கோயில் நிலங்கள் அரசு பொறுப்பில் இருக்கும்போது அதை தீட்சிதர்கள் எப்படி விற்க முடியும்

கோயில் நிலங்கள் அரசு பொறுப்பில் இருக்கும்போது அதை தீட்சிதர்கள் எப்படி விற்க முடியும்

 

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் இந்து சமய அறநிலையத்துறை நுழையக்கூடாது என்ற உத்தரவே இருக்கிறது. அறநிலையத்துறை அறம்கெட்ட துறையாக மாறி விட்டதாக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா குற்றச்சாட்டு. கோயில் நிலங்கள் அரசு பொறுப்பில் இருக்கும்போது அதை தீட்சிதர்கள் எப்படி விற்க முடியும் என கேள்வி

கடலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா பங்கேற்று பேசினார்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ஹெச். ராஜா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

2014 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சிதம்பரம் சித்சபேசன் கோயில் நிர்வாகம் பொது தீட்சிதர்களிடம் வந்தது. இதில் அறநிலையத்துறை தலையிடக் கூடாது. அவர்களுக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கோயிலின் சொத்துக்கள் சிறப்பு தாசில்தாரால் 1976 இல் இருந்து கோயில் நிலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு தாசில்தார் இதை பராமரிக்கிறார்.

கோயில் நிலங்கள் பொது தீட்சிதர்களிடம் கிடையாது. 2006 ல் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி 3000 ஏக்கரில் இருந்து கோயிலுக்கு வரும் நிதி சொற்பமான தொகை என நீதிபதி பானுமதி தீர்ப்பு கூறியிருக்கிறார். அரசாங்கம் வருடத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்கிறது. தற்போது அறநிலையத்துறை, 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்று விட்டதாக கூறுகிறார்கள்.

76 முதல் நிலங்கள் உங்களிடம் இருக்கிறது. கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு பொது தீட்சிதர்களிடம் இருந்து கோயிலை அரசாங்கம் எடுத்துக் கொண்டது. 2014 உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகுதான் மீண்டும் கோயில் தீட்சிதர்கள் வசம் வந்தது. ஆனால் இன்னும் நிலம் சிறப்பு தாசில்தார் வசம்தான் உள்ளது. இதை எப்படி தீட்சிதர்கள் விற்க முடியும்.

இதற்கான முழு பதிலை வழக்கறிஞர்களும், தீட்சிதர்களும் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் ஏதாவது ஒரு குறையை அறநிலையத்துறை சொல்லிக் கொண்டிருக்கிறது. அரசாங்க கொள்கை விளக்க குறிப்பில் 4 லட்சத்து 76 ஆயிரம் 581 ஏக்கர் நிலங்கள் எங்களிடம் இருப்பதாக அமைச்சர் கொடுத்திருக்கிறார். 22,600 கட்டிடங்கள், 33 ஆயிரத்து 600 மனைக்கட்டுகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன் விஸ்தீரணம் மட்டும் 28 கோடி சதுர அடி.

இவ்வளவு கோயில் சொத்துக்களை வைத்திருக்கிறீர்கள். இது எல்லாவற்றிற்கும் அறநிலையத்துறை சட்டத்தின்படி வாடகை வசூல் செய்ய வேண்டும். இதன் மூலம் வருடத்திற்கு 8 ஆயிரம் கோடிக்கு மேல் வர வேண்டும். ஆனால் அதை வசூல் பண்ணவில்லை. கடமை தவறியவர்கள் என நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் ஒரு வழக்கின்போது கூறியிருக்கிறார்கள். இதற்கு காரணமான அறநிலையத்துறை இணை ஆணையர்களை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை.

இது ஊழல் துறை. இந்து கோயில்களை சுரண்ட இவர்கள் எதையாவது சொல்லி சித்சபேசன் கோயிலை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கம். தினமும் அதிகாரி ஏன் கோயிலுக்குள் உட்கார்ந்து இருக்கிறார். யாராவது பொது தீட்சிதர்கள் அதிகாரியோடு தகராறு செய்துவிட்டால். பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு போடத்தான். இது தீய நோக்கம் கொண்ட அமைச்சர். தீய நோக்கம் கொண்ட அரசாங்கம்.

இந்த அரசாங்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் சித்சபேசன் கோயிலை அபகரிக்க வேண்டும் என்று சதி திட்டம் தீட்டுகிறது. இந்து மத நம்பிக்கைகளை சிதைக்கும் வண்ணம் செயல்பட வேண்டாம். இந்த கோயிலுக்கென உள்ள சிறப்பை அழிக்க வேண்டும் என்பதே அறநிலையத் துறையின் நோக்கம். இங்கு தரிசன கட்டம் இல்லை. அபிஷேக கட்டணம் இல்லை. உண்டியல் கிடையாது. சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா கொசுவைப்போல அழிப்பேன் என கூறும் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் போன்றோர் கோயிலை அழிக்க நினைக்கிறார்கள்.

எங்கள் ஆண்டவனை நாங்கள் கும்பிட எதற்கு தரிசன கட்டணம். அறநிலையத்துறை அமைச்சர் அல்லோலியாபாபு கிறிஸ்தவ கும்பல், கோயிலை அபகரிக்க அனாவசியமாக தலையிடுகிறார்கள். பொய் குற்றச்சாட்டுகளை சொல்லுகிறார்கள். சிறப்பு தாசில்தாரிடம் உள்ள நிலத்தை தீட்சிதர்கள் எப்படி விற்பார்கள். இருப்பார்கள் தமிழ்நாட்டிலேயே உண்டியல் இல்லாத, தரிசன கட்டணம் இல்லாத, அபிஷேக கட்டணம் இல்லாத கோயில். இதுபோன்று எல்லா கோயில்களையும் பராமரிக்க வேண்டிய துப்பு கெட்ட அரசாங்கம் நாடகம் போடுகிறது.

முதலில் அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு போகக்கூடாது என பத்திரிகையில் எழுதுங்கள். இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. அதைப் பற்றி எழுதுங்கள். என்னை கேள்வி கேட்பதை விடுங்கள். இந்துக்கள் விரோத அரசை பற்றி கேள்வி எழுப்புங்கள். அதுக்கப்புறம் என்னை கேளுங்கள். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி அதிகாரிகள் உள்ளே செல்கிறார்கள். தேருக்கு முன்னால் பகவானே வெளியே வந்து விடுகிறார். அப்போது நான் மேடையில் ஏறுவேன் என்றால் என்ன சொல்வது. இதையெல்லாம் செய்வது அறம் கெட்ட அறநிலையத்துறை. இந்து விரோத செயல். அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை என கூறினார்.

What do you think?

அமைச்சர் மேல் …100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு ….நாகர்ஜுனா அறவிப்பு

ரசிகர்களின் மனதை வேட்டையன் வேட்டை ஆடியதா