in

பிக் பாஸ் வீட்டில் செம ஆக்ஷன் காட்சிகளால் வீடே ரணகளம்

பிக் பாஸ் வீட்டில் செம ஆக்ஷன் காட்சிகளால் வீடே ரணகளம்

 

என்னதான் வேட்டையன் படத்தின் அலம்பரை தாங்க முடியவில்லை என்றாலும் இன்னொரு பக்கம் பிக் பாஸ் வீட்டிலும் நேற்று செம ஆக்ஷன் காட்சிகளால் வீடே ரணகளம் ஆகிவிட்டது.

மூன்று நாட்களுக்குள்ளேயே பிக் பாஸ் வீட்டில் சண்டை அனல் பறக்கிறது. தற்பொழுது ஆண் போட்டியாளர்களின் வீட்டிலிருந்து ஒருவர் பெண் வீட்டிற்குள்ளும் பெண் வீட்டிலிருந்து ஒரு போட்டியாளர் ஆண் வீட்டிற்குள்ளும் விளையாட சென்றிருக்கிறார்கள்.

ஆண்கள் சார்பாக முத்துக்குமாரும் பெண்கள் சார்பாக பவித்ரா ஜனனியும் சென்று இருக்கிறார்கள். பவித்ரா ஆண்கள் வீட்டில் சென்றவுடன் அவரை VJ விஷால் வாடி போடி என்று கூப்பிட கோபமான ஜனனி அவருடன் சண்டை போடுகிறார்.

விஷாலோ நான் அப்படித்தான் எல்லோரையும் கூப்பிடுவேன் அது என்னுடைய பழக்கம் அதனை மாற்ற முடியாது என்று கோபப்பட சண்டை முற்றியது.

இவர்களை விளக்க அருண் பிரசாந்த் இடையில் வந்து சமரசம் செய்கிறார். இன்னொரு பக்கம் ரஞ்சித்தும் ரவீந்திரனும் வாயா போயா என்று சொல்லி சண்டை போட்டு கொள்கின்றனர்.

ஒரு கட்டத்தில் ரஞ்சித் கோபத்துடன் அடிக்க கையை ஓங்குகிறார் அவர்களை விலக்கி விட இடையில் புகுந்த அருண் பிரசாந்தை ரஞ்சித் தள்ளிவிட டைவ் அடித்து விழும் அருண் பிரசாந்த் எழுந்திருக்காமல் வடிவேலு மாதிரி ஒரு பொசிஷன்ல இருக்க என்னை யாராவது தூக்கி விடுங்க அப்படின்னு அவர் கத்த அவர யாரும் கண்டு கொள்ளாமல் எல்லோரும் சண்டையை வேடிக்கை பார்க்கின்றனர்.

அருணும் ஒரு Content கிடைக்க வேண்டும் என்று விழுந்தப்படியே கிடைக்கிறார். அர்ச்சனா டைட்டில் அடித்துவிட்டார் நாமும் அடிக்கவேண்டும் என்று அருண் ஓவர் சீன் போடுகிறார்.

ஹவுஸ் மேட்ஸ்க்கு என்ன செய்வதென்று தெரியாமல் இவர்களின் சண்டையை பார்த்து திகைத்து நிற்க கடைசியில் இருவரும் போட்ட சண்டை எல்லாம் டிராமா இதற்குப் போய் இவ்வளவு பில்டப்பா என்று கேட்கும் அளவிற்கு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இந்த வாரத்தின் ப்ரோமோவில் ரவீந்தர் ரூல்ஸ் புக்கை வாசிக்கிறார். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ரவீந்தர், அருண் பிரசாந்த், ரஞ்சித், சௌந்தர்யா, ஜாக்குலின் உள்ளிட்டோர் செகண்ட் நிலையில் பெரும்பாலான போட்டியாளர்கள் ரஞ்சித், சௌந்தர்யா மற்றும் ரவீந்திரரின் பெயரை வோட் செய்து இருக்கின்றனர்.

What do you think?

மயிரிழையில் உயிர்தப்பிய காவல்துறை அதிகாரி

குளத்தில் முதலை உள்ளதாக பொதுமக்கள் அச்சம்