in

மாவட்ட அளவிலான தபால் தலைக் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் காலச்சோழன் கலை அரங்கத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பில் தஞ்சை மாவட்ட அளவிலான தபால் தலைக் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது.

தபால் தலை கண்காட்சி..

தஞ்சாவூர் அஞ்சல் கோட்டம், கும்பகோணம் அஞ்சல் கோட்டம் மற்றும் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டம் உள்ளடங்கிய தபால் தலை கண்காட்சி இந்திய அஞ்சல் துறை சார்பில் களஞ்சியம்@79இ என்ற தலைப்பில் தமிழ் பல்கலைக்கழகம்
கரிகால் சோழன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு வந்தவர்களை தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி வரவேற்றார்.

கண்காட்சியை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி , மாவட்ட வனச்சரக அலுவலர் அகில் தம்பி, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த கண்காட்சியில் தபால் நிலையம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரையிலான ஸ்டாம்புகள் உட்பட பல்வேறு தபால் நிலைய பொருட்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தபால் தலைகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாணவர்களும், பள்ளிகளில் தபால்தலை சேகரிப்பாளர்களும் அவர்களுடைய தபால்தலை சேகரிப்புகளையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல துறைகளில் வினாடி வினா, கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை அந்தந்த துறைகளில் சிறப்பானவர்களை கொண்டு நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு ஸ்டால்கள் மற்றும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைக்கான கவுண்டர்களும் அமைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியில் கலந்து கொண்டு தபால் தலைகளை பார்த்து தெரிந்து கொண்டனர்.

மேலும் இது குறித்து தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி‌கூறுகையில்..

களஞ்சியம் @79இ என்ற தலைப்பு வைத்ததற்கு காரணம், உலக வரைபடத்தில் 79°E தீர்க்க ரேகையில் நம்ம தஞ்சாவூர் பெரிய கோயில் அமைந்துள்ளது. இதனால தான் வித்தியாசமா இருக்கட்டும்னு இந்த நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு பெயரை வெச்சோம். பெயர் மட்டும் உள்ள கண்காட்சியும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில அமச்சிருக்கோம். இந்த தபால் தலை என்பது பாரம்பரியம் அறிவியல் கலாச்சாரம் பண்பாடு, ஆகியவற்றின். எடுத்துக்காட்டு மையமாக விளங்குகிறது.

இக்கண்காட்சியில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ஏராளமான அஞ்சல் தலைகளை காட்சிப்படுத்தியுள்ளனர். அது மட்டுமல்லாமல் அஞ்சல் தலை சேகரிப்பின் மூலம் ஒரு நாட்டின் பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். இங்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டு அஞ்சல் தலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. என்று கூறினார்..

What do you think?

சிவசேனா கட்சியின் உத்தம் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்கரே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம்

நெல்லை ராம் திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் உற்சாக நடனம்