in

தீச்சிதர்கள் மட்டுமே விளையாட கூடிய கிரிக்கெட் மைதானத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீச்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிதக்கது அதனை வீடியோ எடுத்த விசிகவினர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீச்சிதர்கள் மட்டுமே விளையாட கூடிய கிரிக்கெட் மைதானத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

தீச்சிதர்கள் மட்டுமே விளையாட கூடிய கிரிக்கெட் மைதானத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்

 

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர் கட்டுனர்வு காலிபணியிடங்கள் 2000 க்கும் மேற்பட்ட இடம் அறிவிக்கப்பட்டது. காலி இடம் நிரப்புவது நேர்காணலில் நிரப்பபடுவதால் ஊழல் முறைகேடு நடைபெறுவதாகவும், நேர்காணல் மூலம் மட்டும் நிரப்ப கூடாது,
பணியாளர் நியமனங்களில் ஊழல் உள்ளதால் போட்டிதேர்வு மூலம் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார். காலியாக உள்ள 6 பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடங்கள் நிரப்பவேண்டும்

துணை வேந்தர் நியமிப்பதற்கான தடையை நீக்க வேண்டும் அப்படி நீக்கவில்லை என்றால் 11 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவி காலியாக இருக்கும் எனதால் அரசு துணை வேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தக்காளி, வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளதால் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை வேண்டும், விலையை கட்டுபடுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது, இதனால் கிராம புற மக்கள் மின் கட்டணத்தை கட்டுவது சாத்தியமில்லை, ஆன் லைன் மூலமாக மிண்கட்டணம் செலுத்த நேரிட்டால் மின்வாரியத்தில் ஆட் குறைப்பு செய்வதாகி விடும் இளைஞர்கள் வேலைவுப்பன்றி இருக்க நேரிடும் என்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவதால் இதனை கட்டுபடுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது.

டெங்கு குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டதில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ள்னர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு இல்லாமல் சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக அரசு செயல்படுபதாகவும் தொழிற்சங்கம் அமைக்க முடியாது என துணை முதலமைசர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் நலன்களை காவு கொடுத்து விட்டு சாம்சங் நிறுவனத்தின் நலனை காக்கிறது என்பதை உதயநிதியின் பேச்சு காட்டுவதால் இதற்கு அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் என கூறினார். எடப்பாடி அருகே புனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட்தேர்வினை ரத்து செய்வேன் என கூறிய திமுக அரசும் நீட்தேர்வில் விலக்கு அளிக்காத மத்திய அரசு தான் இதற்கு பொறுபேற்க வேண்டும்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீச்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிதக்கது அதனை வீடியோ எடுத்த விசிகவினர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பல கோவில்களில் இந்த விளையாட்டு விளையாட கூடிய ஆபத்து நேரிடும் என்பதால் தீச்சிதர்கள் மட்டுமே விளையாட கூடிய கிரிக்கெட் மைதானத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

பேட்டி – ராமதாஸ் (பாமக நிறுவனர் )

What do you think?

சென்னைக்கு குடிநீர் செல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பிரிட்டன் தமிழ் ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 10-10-2024