in ,

அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் ஆலய நவராத்திரி விழா

அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் ஆலய நவராத்திரி விழா

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் ஆலய நவராத்திரி விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அம்மன் குறத்தி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் ஆலய நவராத்திரி விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி உடனுறை ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் ஆலய நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக பொடி, பால், தயிர், சந்தனம், மற்றும் பலவிதமான அபிஷேகங்கள் நடைபெற்றன.

மேலும் மூலவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரருக்கு பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கொலுவில் வைக்கப்பட்ட வைக்கப்பட்ட உற்சவர்களுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

மேலும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் குறத்தி அம்மன் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பஞ்சமுகத்திபார்னை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இதில் இரட்டணை கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்ச்சிக்கான உபயதாரர்கள் இரட்டணை ஊராட்சி மன்ற உறுப்பினர் B. மகாலட்சுமி பாலகிருஷ்ணன் மற்றும் இரட்டணை ஊராட்சி மன்ற உறுப்பினர் M.கார்த்திக் குடும்பத்தினர்.

What do you think?

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு மண்டல அபிஷேகம்

 ஸ்ரீ ரங்கநாயகி சமீதா ஸ்ரீ பள்ளிகொண்டு பெருமாள் சன்னதி கருட சேவை