in ,

முன்னூர் கிராமம் ஸ்ரீ பிரகன் நாயகி அம்மனுக்கு ஸ்ரீ மகிஷாசுரவர்த்தினியாக அலங்காரம்

முன்னூர் கிராமம் ஸ்ரீ பிரகன் நாயகி அம்மனுக்கு ஸ்ரீ மகிஷாசுரவர்த்தினியாக அலங்காரம்

 

முன்னூர் கிராமம் ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் ஸ்ரீ விஜயதசமியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீ பிரகன் நாயகி அம்மன் ஸ்ரீ மகிஷாசுரவர்த்தினியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் முன்னூர் கிராமம் ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் ஸ்ரீ விஜயதசமியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீ பிரகன் நாயகி அம்மனுக்கு ஸ்ரீ மகிஷாசுரவர்த்தினியாக அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

துர்க்கையின் உருவான மகிஷாசுரமர்த்தினி பத்து கரங்களைக் கொண்டவர். வலது கரங்களில் திரிசூலம், கட்கம், சக்தி ஆயுதம், சக்கரம் அம்பு ஆகியவையும் இடது கரங்களில் பாசம் அங்குசம்.

கேடயம், பரசு, மணி ஆகியவற்றைத் தரித்திருப்பார். இவளின் காலடியில் துண்டிக்கப்பட்ட மகிஷனின் கழுத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பது போல் அமைந்திருக்கும் ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழக்கம் இதேபோல் இவ்வாலயத்தில் வருடம் தோறும் அம்பு விடு உற்சவம் என்று நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து மேலும் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி காட்சியளித்த ஸ்ரீ பிரகன் நாயகி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை உள்ளூர் சிவ ஸ்ரீ சரவண குருக்கள் செய்திருந்தார்.

What do you think?

ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஏகப்பட்ட நவராத்திரி விழா

முட்டியூர் ஸ்ரீ மாணிக்கஈஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பண்டரி நாதர் 112 ஆம் ஆண்டு பஜனை மகோற்சவ விழா