in ,

முட்டியூர் ஸ்ரீ மாணிக்கஈஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பண்டரி நாதர் 112 ஆம் ஆண்டு பஜனை மகோற்சவ விழா

முட்டியூர் ஸ்ரீ மாணிக்கஈஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பண்டரி நாதர் 112 ஆம் ஆண்டு பஜனை மகோற்சவ விழா

 

முட்டியூர் ஸ்ரீ மரததாம்பிகை சமேத ஸ்ரீ மாணிக்கஈஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பண்டரி நாதர் 112 ஆம் ஆண்டு பஜனை மகோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் முட்டியூர் கிராமத்தில் மரததாம்பிகை சமேத ஸ்ரீ மாணிக்கஈஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பண்டரி நாதர் 112 ஆம் ஆண்டு பஜனை மகோற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ பண்டரிநாதர் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து கோயில் உட்பிரகார வலம் வந்து ஸ்ரீ கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் கருட வாகனத்தில் காட்சியளித்த பண்டரி நாதருக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீ பண்டரி நாதர் கருட வாகனத்தில் கிராம வீதி உலா வர அவரைத் தொடர்ந்து திண்டிவனம் வட்டார சுவாமி பிரபந்த கோஷ்டிகள் பஜனையுடன் வீதி உலா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய பரம்பரை அறங்காவலர் சபரிநாதன் குருக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் முட்டியூர்ஸ்ரீ பண்டரி நாதர் பக்த சபை யார் செய்திருந்தனர்.

What do you think?

முன்னூர் கிராமம் ஸ்ரீ பிரகன் நாயகி அம்மனுக்கு ஸ்ரீ மகிஷாசுரவர்த்தினியாக அலங்காரம்

மழையால் பள்ளமான சாலை அச்சத்தில் வாகன ஓட்டிகள் உறக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை