in

வண்டியூர் கண்மாய் வரத்து கால்வாய் ஆகிய இடங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு

வண்டியூர் கண்மாய் வரத்து கால்வாய் ஆகிய இடங்களில்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு

 

மதுரை மாநகராட்சி டி.எம் நகர், லேக் ஏரியா, டி.டி.சி நகர் மற்றும்
வண்டியூர் கண்மாய் வரத்து கால்வாய் ஆகிய இடங்களில்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு

மதுரை மாநகராட்சி டி.எம் நகர், லேக் ஏரியா, டி.டி.சி நகர் மற்றும் வண்டியூர் கண்மாய் வரத்து கால்வாய் ஆகிய இடங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்ததாவது.

எதிர்பாராத புயலின் காரணமாக மதுரை வடபகுதி, செல்லூர் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் டி.எம் நகர் பகுதியில் தண்ணீர் தேங்கியது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பாலம் கட்டப்பட்டது. தற்போது மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டுமென்ற இப்பகுதி மக்களின் கோரிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாளை மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வண்டியூர் கண்மாயில் அதிக அளவு நீர் வரத்து இருந்தாலும், வெளியேறும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதகுகள் அனைத்தும் தூக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் களத்தில் நின்று பணியாற்று கிறார்கள். அவர்களின் அறிவுரைப்படி இங்கு அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மண்டலத் தலைவர் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டுவோர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் திரு.சி.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், மண்டலத் தலைவர் திருமதி.வாசுகி சசிக்குமார் அவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

What do you think?

கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் எச்சரிக்கை

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூரில் அமைந்துள்ள ஆமருவியப்பன் ஆலய தெப்போற்சவம்