in

புரட்டாசி மாத சதுர்த்தியை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள்

புரட்டாசி மாத சதுர்த்தியை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள்

 

நாமக்கல்லை அடுத்த நன்செய் இடையாறு திருவேலீஸ்வர் சிவ ஆலயத்தில் புரட்டாசி மாத சதுர்த்தியை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நன்செய் இடையாற்றில் திருமணிமுத்தாற்ங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவல்லி அம்பிகா சமேத திருவேலீஸ்வரர் சுயம்பு சிவாலயம் இந்த சிவ ஆலய பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம் கிபி 10ம் நூற்றாண்டு ஸ்தலம் இந்த ஆலயம் முதலாம் ராஜாராஜசோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது.

புரட்டாசி மாத சதுர்தசியை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கும் சிவகாம சுந்தரிக்கும்பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி, கலசம் கொண்டு உட்பட 11 வகை வாசனை திரவியபெருட்கள் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு தீப உபசரிப்புகள் காண்பித்த பின் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் நடராஜப் பெருமான், திருவேலீஸ்வரரை வணங்கி சென்றனர்.

What do you think?

நாமக்கல் மோகனூரில் புரட்டாசி மாத பெளர்ணமி சிறப்பு அபிஷேக அலங்காரம்

அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத (துலா விஷு புண்யகாலம்)