in

தஞ்சை பெருவுடையார் கோவில் தென் திருகயிலாயம் பெளர்ணமி வலம்

தஞ்சை பெருவுடையார் கோவில் தென் திருகயிலாயம் பெளர்ணமி வலம்

 

பெளர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெருவுடையார் கோவில் தென் திருகயிலாயம் பெளர்ணமி வலம் (கிரிவலம்) பாதையில் யானை முன்னே செல்ல சிவகனங்கள் இசைக்க காளையாட்டம். உருமி மேளம் இசையுடன் ஏராளமான பக்தர்கள் வலம் வந்து பெருவுடையாரை வழிபட்டனர்.

உலக பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வரும் தஞ்சை பெருவுடையார் கோவிலை சுற்றி கிரிவலம் பாதை இருந்தது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியக்கோவில் கும்பாபிஷேகம் பணிகள் நடந்த போது கிரிவலம் பாதை மூடப்பட்டது.

8 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த பெளர்ணமி அன்று கிரிவலம் பாதை திறக்கப்பட்டது.

இதனை அடுத்து இரண்டாவது பெளர்ணமி இன்று தென் திரு கயிலாய பெளர்ணமி வலம் (கிரிவலம்) பாதையில் தருமபுர ஆதினம் கட்டளை தம்பிரான் சுவாமிகள், மேயர் ராமநாதன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் நடந்து செல்ல அவர்களை தொடர்ந்து காளையாட்டம், உருமி மேளம். சிவகனங்கள் இசையுடன் ஏராளமான பக்தர்கள் வலம் வந்து பெருவுடையாரை வழிப்பட்டனர்.

What do you think?

சிவகங்கை ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது

முழு…வீடியோ…வையும் போடலாமே ஓவியாவை நக்கல் பண்ணிய ரசிகர்