in

நடிகை தமன்னாவிடம் அமலாக்க துறை விசாரணை


Watch – YouTube Click

நடிகை தமன்னாவிடம் அமலாக்க துறை விசாரணை

 

நடிகை தமன்னாவிடம் நேற்று அமலாக்க துறை விசாரணை நடத்தினர். (HPZ Token’ mobile app ) ஹெச்பி இஸட் டோக்கன் என்ற செல்போன் ஆப் மூலம் நாடு முழுவதும் மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணம் வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்க துறையினர் விசாரணை.

கிரிப்டோ கிர்றேன்சி (Crypto Currencies ), Bitcoin … போன்ற வற்றில் முதலீடு செய்ய சொல்லி ஏமாற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிதிகள் சட்டவிரோத ஆன்லைன் கேமிங் மற்றும் பந்தயம் மற்றும் பிட்காயின் முதலீடு ஆகியவற்றிற்காக “மோசடியாக” பெறப்பட்டன, 57000 முதலீடு செய்தால் மூன்று மாதங்கள் பிறகு ஒவ்வொரு மாதமும் நான்கு ஆயிரம் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து மக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்து இருக்கிறது.

ஒரு முறை மட்டுமே மக்களுக்கு பணம் திருப்பி செலுத்தப்பட்டு பின்னர் புதிய வாடிக்கையாளரிடம் பணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக நாகாலாந்து மாநிலத்தின் கோகிமா(Kohima) சைபர் Crime போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நிதி மோசடி சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறையினரின் குற்றப்பத்திரிகையில் 76 சீனக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் உட்பட மொத்தம் 299 நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

இந்த செல்போன் செயலில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் தமன்னா பங்கேற்று இருக்கிறார். அதற்காக அந்நிறுவனத்திடம் பணம் பெற்று இருக்கிறார்.

இதனை தொடர்ந்து தமன்னாவிடம் அமலாக்கத்துறை நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்திய அவரிடம் வாக்குமூலம் பெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

நெல்லையப்பர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா

மிஸ் இந்தியா…வாக தேர்வு செய்யப்பட்ட. மத்திய பிரதேச டிவி நடிகை