மிஸ் இந்தியா…வாக தேர்வு செய்யப்பட்ட. மத்திய பிரதேச டிவி நடிகை
மத்திய பிரதேசத்தை சேர்ந்த டிவி நடிகை மிஸ் இந்தியாவாக மும்பையில் நடந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மிஸ் இந்தியா போட்டி தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய அழகி போட்டி நேற்று நடத்தப்பட்டது.
அக்டோபர் 16 அன்று நடத்த பட்ட இந்தப் போட்டியில் 29 மாநிலங்களைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஒருவரும் கலந்துகொண்டனர்.
இறுதி சுற்று வரை சென்று மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிகிதா போர்வாள்.
நிகிதா போர்வாலின் வெற்றி, வரவிருக்கும் உலக அழகி போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இரண்டாவது இடத்தை தாத்ரா நகர் ஹைவேலியை சேர்ந்த ரேகா பாண்டே.
குஜராத்தை சேர்ந்த ஆயுஷி தோலக்கியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
முதல் இடத்தை பிடித்த நிகிதாவுக்கு சென்ற வருடம் மெஸ் இந்திய பட்டத்தை வென்ற நந்தினி குப்தா கிரீடம் சூட்டினார்.
18 வயதில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர். இதுவரை 60க்கும் மேற்பட்ட டிவி தொடர்களில் நடித்துள்ளார்.
கிருஷ்ணா லீலா என்ற தலைப்பில் ஒரு நாடகத்தையும் 73 வது உலக அழகியாக மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற நிகிதா இந்தியா சார்பில் உலக அழகி போட்டியிலும் கலந்து கொள்ளகிறார்.
ரேகா மும்பையைச் சேர்ந்த திரைப்படம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் பட்டதாரி. ஆயுஷி, உடற்தகுதி மற்றும் ஆரோக்கியத்திற்காக ஆர்வமுள்ளவர்.