in

பெருமாள்பட்டி அருள்மிகு ஶ்ரீ பஞ்சாட்சர அய்யனார் சுவாமி திருக்கோவிலில் புரவி எடுப்பு விழா

பெருமாள்பட்டி அருள்மிகு ஶ்ரீ பஞ்சாட்சர அய்யனார் சுவாமி திருக்கோவிலில் புரவி எடுப்பு விழா

 

பெருமாள்பட்டி அருள்மிகு ஶ்ரீ பஞ்சாட்சர அய்யனார் சுவாமி திருக்கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்களா தேவியர்கள் சமேத ஸ்ரீ பஞ்சாட்சர அய்யனார் சுவாமி திருக்கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

முன்னதாக மூலவர் அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

பின்னர் பக்தர்கள களிமண்ணால் செய்யப்பட்ட குதிரை பொம்மைகளுக்கு மலர் மாலைகள் வஸ்திரங்கள் அணிவித்து வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் புரவிகளை தோளில் சுமந்து ஊர்வலமாக வலம் வந்தனர்.

நிறைவாக கோவிலை அடைந்து அய்யனார் சுவாமிக்கு குதிரை பொம்மைகளை சமர்ப்பித்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.

இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யனார் சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

What do you think?

மேலவாணியங்குடி அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் வியாழக்கிழமை சிறப்பு மாலை ஆரத்தி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு வீதியுலா உற்சவம்