in

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 17-10-2024


Watch – YouTube Click

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 17-10-2024

லியாம் பெய்ன் சமீபத்தில் மறைந்தார். லியாம் பெய்னின் மறைவை பற்றிய விவரங்கள் அடுத்தடுத்து வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுதுகின்றது . one direction இசைக்குழுவில் புகழ் பெற்ற லியாம் பெய்ன், அர்ஜென்டினாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து விழுந்து மறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெய்ன், 31, அவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு வீடியோ ஒன்ரை ஸ்னாப்சாட்டில் பதிவிட்டிருந்தார். “இங்கே அர்ஜென்டினாவில் ஒரு அழகான நாள்” என்று கூறினார். “மதியம் 1 மணி ஆகிறது என்றாலும், காபி மற்றும் காலை உணவை அனுபவிக்கிறேன்,”. “ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வரை தூங்குங்கள்.என்று பதிவிட்டுள்ளார்

காசா, லெபனான் மற்றும் மத்திய கிழக்கில் “அதிகமான” தேவையை நிவர்த்தி செய்ய பதினைந்து UK உதவி தொண்டு நிறுவனங்கள் மனிதாபிமான அடிப்படையில் சேவையை தொடங்குகின்றன. இந்த தொண்டு நிறுவனங்கள் பேரழிவு காலத்தில் அவசரக் குழுவை (DEC) உருவாக்குகின்றன, மில்லியன் கணக்கானவர்களுக்காக நிதி திரட்டுகிறது. இந்த நிறுவனங்கள் இஸ்ரேலை சேர்க்க தங்கள் தயாராக உள்ளன”. DEC தலைமை நிர்வாகி சலே சயீத் கூறியதாவது”பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கிஷ்டதை எதிர்கொள்கின்றனர்.உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் மருத்துவப் பாதுகாப்புத் தேடித் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய மக்களூக்கு முதல் £10m நன்கொடை ஒதுக்குவதாக கூறியுள்ளது. DEC இன் பணிகளுக்கு ஆதரவளிக்க Sky, BBC, ITV ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும். , வியாழன் மாலை சேனல் 4 மற்றும் சேனல் 5, BBC வானொலி மூலம் அழைப்புகள் நாள் முழுவதும் ஒளிபரப்பப்படும்.

கேபினட் அமைச்சர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாகச் செய்ய வேண்டிய செலவினக் குறைப்புகளின் அளவைப் பற்றிய கவலையுடன் பிரதமரிடம் சென்றுள்ளனர். ரேச்சல் ரீவ்ஸ் அதிக வரி வருவாயைக் கேட்கப் போவதில்லை என்று சாம் தெரிவிக்கிறார், ஆனால் சக ஊழியர்களிடம் அவர்களது தனிப்பட்ட துறைகளில் சேமிப்புகளைச் செய்யச் சொல்லி அதிக பணத்தை சேமிக்க சொல்லிருக்கிறார். மேலும் சிலர் பிரதமருக்கு இந்த விவாதத்தில் உதவி தேவை என்று கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் அக்டோபர் 30 ஆம் தேதி பட்ஜெட்டுக்கு முன் Ms ரீவ்ஸ் தனது மிகப்பெரிய முடிவுகளை இறுதி செய்ய கடைசி நாளாக நேற்று கொடுக்கப்பட்டது இரண்டு வாரங்களுக்கு முன்பு – முக்கிய நடவடிக்கைகள் சரிபார்க்க பட்ஜெட் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது .ஒன்று நிச்சயம்: “இது நம்பமுடியாத அளவிற்கு கடினமான பிரச்சனையாக தெரிகிறது.” இன்னும் இரண்டு வாரங்களில், ரேச்சல் ரீவ்ஸ் டெஸ்பாட்ச் பாக்ஸில் எழுந்து நின்று 15 ஆண்டுகலூக்கு பிறகு லேபரின் முதல் பட்ஜெட்டை வழங்குவார்.

ஊக்கமருந்து தடையை நான்கு ஆண்டுகளில் இருந்து 18 மாதங்களாகக் குறைத்த பிறகு ஜுவென்டஸ் மிட்பீல்டர் பால் போக்பா கால்பந்துக்குத் திரும்ப ஆர்வமாக உள்ளதாகவும், 2026 உலகக் கோப்பையில் பிரான்சுடன் விளையாட வேண்டும் என்று கனவு காண்கிறேன் என்றும் கூறினார்.2023 செப்டம்பரில் இத்தாலியின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பால் (NADO Italia) தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (CAS) தடைசெய்யப்பட்ட பொருளான DHEA சோதனையைத் தொடர்ந்த போது போக்பா டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்திருபதாக கண்டுபிடிக்கப்பட்டது DHEA-ஐ வேண்டுமென்றே உட்கொண்டது இல்லை என்று CAS க்கு முறையிட்டார் போக்பா, மீண்டும் மார்ச் மாதம் ஜுவென்டஸ் அணிக்காக விளையாடத் தகுதி பெறுவார் – மேலும் அவர் இத்தாலிய கிளப்பில் விளையாடுவதற்கு ஊதியக் குறைப்புக்கு கூட தயாராக இருப்பதாகக் கூறினார்.“2025ல் இயல்பு நிலைக்குத் திரும்ப நான் தயாராக இருக்கிறேன். எனக்கு ஒரே ஒரு ஆசை, கால்பந்து விளையாட வேண்டும். உண்மை என்னவென்றால், நான் ஒரு ஜூவ் பிளேயர் மற்றும் நான் ஜுவ்வுக்காக விளையாட தயாராகி வருகிறேன், ”என்று போக்பா புதன்கிழமை இத்தாலிய செய்தித்தாள் லா கெஸெட்டா டெல்லோ ஸ்போர்ட்டிடம் கூறினார்


Watch – YouTube Click

What do you think?

Hansika Released House Warming Photos

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 18-10-2024