in

வீச்சருவாளை காண்பித்து காவல்துறையினரை மிரட்டி தப்பிய சம்பவம்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வீச்சருவாளை காண்பித்து காவல்துறையினரை மிரட்டி தப்பிய சம்பவம் – விரட்டிப் பிடித்த தனிப்படை

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை போலீசார் எஸ்.ஐ., செந்தில்குமார் தலைமையில் கடந்த 15 ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இப்போது வெள்ளை நிற காரில் சிலர் துப்பாக்கிகளுடன் வருவதாக அரசியல் தகவல் கிடைத்தது அரசியல் தகவல் கிடைத்தது அதனால் கரூர் திருச்சி சாலையில் பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வழியாக வந்த TN 28 BC 8283 என்ற பதிவு எண் கொண்ட மாருதி கார், செக்போஸ்டில் நிற்காமல் வேகமாக செல்ல முயன்ற போது, பேரிகார்டில் மோதி நின்றது. உடனே காரில் இருந்து வீச்சரிவாளுடன் இறங்கிய குமுளியை சேர்ந்த ராஜ்குமார் என்ற ரவுடி, போலீசாரை மிரட்டி விட்டு காரில் தப்பிச் சென்றார்.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திய ராம்ஜி நகர் மற்றும் பெட்டவாய்த்தலை போலீசார், கடந்த 16ம் தேதி, பரமக்குடி ஆதி ஏந்தல் கண்மாய் கரை அருகே, சரித்திர பதிவேடு குற்றவாளியான குமுளி ராஜ்குமார், 45,கரூர் மாவட்டம் இனுங் கூர் பாலசுப்பிரமணியம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களது காரை சோதனை செய்தபோது இரண்டு நாட்டு துப்பாக்கிகள் இரண்டு வீச்சரிவாள், 25 நாட்டு வெடிகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

இதில், கடந்த மூன்று ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த ராஜ்குமார் மீது ஐந்து கொலை வழக்குகளும் இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் இரண்டு வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இது தவிர, துறையூர் சமயபுரம் பெட்டவாய்த்தலை குளித்தலை தொட்டியம் போன்ற இடங்களில் பதுங்கி இருந்த ராஜகுமாரின் ஆதரவாளர்கள் 13 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையினரை மிரட்டிய தப்பிய சம்பவம் – விரட்டிப் பிடித்த தனிப்படை

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை போலீசார் எஸ்.ஐ., செந்தில்குமார் தலைமையில் கடந்த 15 ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இப்போது வெள்ளை நிற காரில் சிலர் துப்பாக்கிகளுடன் வருவதாக அரசியல் தகவல் கிடைத்தது அரசியல் தகவல் கிடைத்தது அதனால் கரூர் திருச்சி சாலையில் பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வழியாக வந்த TN 28 BC 8283 என்ற பதிவு எண் கொண்ட மாருதி கார், செக்போஸ்டில் நிற்காமல் வேகமாக செல்ல முயன்ற போது, பேரிகார்டில் மோதி நின்றது. உடனே காரில் இருந்து வீச்சரிவாளுடன் இறங்கிய குமுளியை சேர்ந்த ராஜ்குமார் என்ற ரவுடி, போலீசாரை மிரட்டி விட்டு காரில் தப்பிச் சென்றார்.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திய ராம்ஜி நகர் மற்றும் பெட்டவாய்த்தலை போலீசார், கடந்த 16ம் தேதி, பரமக்குடி ஆதி ஏந்தல் கண்மாய் கரை அருகே, சரித்திர பதிவேடு குற்றவாளியான குமுளி ராஜ்குமார், 45,கரூர் மாவட்டம் இனுங் கூர் பாலசுப்பிரமணியம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களது காரை சோதனை செய்தபோது இரண்டு நாட்டு துப்பாக்கிகள் இரண்டு வீச்சரிவாள், 25 நாட்டு வெடிகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

இதில், கடந்த மூன்று ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த ராஜ்குமார் மீது ஐந்து கொலை வழக்குகளும் இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் இரண்டு வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இது தவிர, துறையூர் சமயபுரம் பெட்டவாய்த்தலை குளித்தலை தொட்டியம் போன்ற இடங்களில் பதுங்கி இருந்த ராஜகுமாரின் ஆதரவாளர்கள் 13 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

What do you think?

திருச்சி துறையூர் அருகே கடன் தொல்லை காரணமாக கணவன் மனைவி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

தீபாவளி திருடர்களை பிடிக்க திருச்சியில் 185 இடங்களில் கண்காணிப்பு