நெல்லை பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பழமையான சிவாலயங்களில் ஒன்றாக இருப்பது பாளையங்கோட்டை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவிலாகும் இந்த கோவிலின் நடைபெறும் பல்வேறு விழாக்களில் பிரசித்தி பெற்ற விழாவாக கல்யாண திருவிழா உள்ளது
இந்த திருவிழாவின் 10 நாட்களும் பல்வேறு அலங்காரத்தில் அம்பாள் திருவீதி உலா நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்றைய தினம் காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்றது அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது
தொடர்ந்து கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவில் முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு மஞ்சள் பால் தயிர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது தொடர்ந்து மாலையில் அம்பாள் திருவீதி உலா விமர்சையாக நடைபெற இருக்கிறது திருவிழாவின் சிகர நிகழ்ச்சி யான திருக்கல்யாண வைபவம் 28 ம் தேதி கோவிலில் நடைபெறுகிறது.