in

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 86 வது பட்டமளிப்பு விழா.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 86 வது பட்டமளிப்பு விழா.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று 789 மாணவர்களுக்கு நேரடியாக பட்டம், பதக்கங்களை வழங்கினார். 36 ஆயிரத்து 382 பேருக்கு பட்டங்கள் வழங்க ஒப்புதல். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர். சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்று பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கினார். குத்துவிளக்கேற்றியபின் விழா துவங்கியது.

பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்று சிறப்பித்தார். இந்திய அரசின் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் முதன்மை ஆலோசகரும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர். சௌமியா சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பிஹெச்டி பட்டம் பெற்ற 697 மாணவர்கள், பதக்கம் பெற்ற 38 மாணவர்கள், முதலிடம் பெற்ற 54 மாணவர்கள் என 789 மாணவ மாணவிகளுக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்கினார்.

இதுதவிர ஒட்டு மொத்தமாக 36,382 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் ரவி உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர் இவ்விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ், தொலைதூரக் கல்வி மைய இயக்குனர் சீனிவாசன் கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி. மலையரசன், காட்டுமன்னார்கோயில் தொகுதி விசிக எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் பழனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் முதன்மை ஆலோசகரும், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவருமான டாக்டர் சௌமியா சுவாமிநாதன் பேசியதாவது

உயர்தர கல்வியை வழங்குவதிலும். ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. பட்டம் பெற்றதற்காக உழைத்துப் படித்துள்ள மாணவர்களின் கனவுகள் நலமாகட்டும். ஆசிரியர்களின் பங்களிப்பையும், பெற்றோர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான இளம் மனங்களின் ஆற்றல் தேசிய வளர்ச்சிக்கு எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்கும் சக்தியை கொண்டுள்ளது.

இயற்கை பேரழிவுகள் மற்றும் தொற்று நோய்கள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் நம் வாழ்க்கையை சீர்குலைக்கும். இந்த அசாதாரண சூழ்நிலைகளில் வழி நடத்த தகவமைப்புகளை வளர்த்துக் கொள்வது அவசியம். கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கோவிட் 19 தொற்றுநோய் என்பது உலகளாவிய நெருக்கடி ஆகும். இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியதால் விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் போன்றோர் அதன் தாக்கத்தை புரிந்து கொள்வதிலும், தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும், தணிப்பதிலும் முன் எப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டனர்

தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் வைரஸ் பற்றிய போதிய அறிவு மற்றும் தகவல் பற்றாக்குறை இருந்தது. ஆனாலும் உலகளாவிய அறிவியல் சமூகம் ஒன்றிணைந்து வைரசை எதிர்க்க புதிய கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க உழைத்தனர். இதில் உலக சுகாதார அமைப்பு முக்கிய பங்கு வகித்தது.

தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் அழுத்தமான சவால்களில் நோயறிதல் கருவி மற்றும் மருத்துவ பொருட்களின் பற்றாக்குறை முக்கியமானது. ஆனால் காலப்போக்கில் இவை மேம்படுத்தப்பட்டன. அதுபோல் பயனுள்ள தடுப்பூசிகளை உருவாக்குவது மற்றொரு பெரிய சவாலாக இருந்தது. தடுப்பூசிகளின் விரைவான வளர்ச்சி மற்றும் பயன்பாடு கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. தொற்றுநோய் நமது உலக நாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்க வேண்டிய தேவையை கோடிட்டு காட்டுகிறது.

உங்களது எதிர்காலத்தை பாதிக்கும் மற்றொரு உலகளாவிய நிகழ்வு செயற்கை நுண்ணறிவாகும். இதன் வளர்ச்சியை அங்கீகரிப்பது அவசியம். சுகாதாரம், கல்வி, பொறியியல், விவசாயம், விண்வெளி அறிவியல் என பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் சக்தி செயற்கை நுண்ணறிவுக்கு உள்ளது. இருப்பினும் செயற்கை நுண்ணறிவை பொறுப்பாகவும், நெறிமுறையாகவும் பயன்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய சவால்களுக்கு மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள தீர்வுகளை நாம் உருவாக்க முடியும். இது மருத்துவம், பருவநிலை, அறிவியல் மற்றும் சமூகநீதி போன்ற துறைகளில் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என கூறினார்.

What do you think?

சிவகாசி ரயில் நிலையத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் இரும்பு பாதை போலீசார் ரயில் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை

பொதுமக்கள் தவறவிட்ட ஒரு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு