in

நாகை அருகே இருசக்கர தணிக்கையின் போது திருட்டுப் போன ஐந்து இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

நாகை அருகே இருசக்கர தணிக்கையின் போது சிக்கிய மூன்று இளைஞர்களிடம் வெவ்வேறு இடங்களில் திருட்டுப் போன ஐந்து இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: காவல்துறையினர் அதிரடி

நாகை மாவட்டம் திருப்பூண்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மல் உசேன் மற்றும் செம்போடை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சாந்தா இவர்கள் இருவரும் திருப்பூண்டி கடத்தெருவில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று பொருள் வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளும் காணவில்லை. உடனடியாக இது குறித்து கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பிரதாபுராமபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கீழையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேளாங்கண்ணி நோக்கி வேகமாக வந்த பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் வந்த மூவரிடம் விசாரணை செய்தனர். அவர்கள் முரனுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். விசாரணையில் இவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருப்பூண்டி பகுதியை சேர்ந்த அஜ்மல் உசேனுக்கு சொந்தமானது என்பது அண்மையில் திருட்டு போன இருசக்கர வாகனம் என்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த வெங்கடேஷ், அந்தனப்பேட்டை யோகேஷ், வடக்கு பொய்கைநல்லூர் சந்தோஷம் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்கள் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மற்ற நான்கு இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நாகை அருகே வாகன தணிக்கையின் போது சிக்கிய மூன்று நபர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

What do you think?

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் புரட்டாசி மாதம் பெளர்ணமி பூஜை