in

2ஆவது திருச்செந்தூர், 3ஆவது திருப்பரங்குன்றம் என பதிவற்ற திருமணங்களை செய்து ஏமாற்றுவதாக கூறி பட்டதாரி பெண் மீது புகார் அளித்த இளைஞர்.

லிஸ்ட்படி நான் தான் 2ஆவது ஆனா முத்துலெட்சுமி 3ஆவதோடு எஸ்கேப் ஆகிட்டாங்க , வீட்டோட மாப்ளனு சொல்லி 10 வருசம் பாரின்ல சம்பாதிச்சு 13 லட்சம பணம், 17 பவுன் நகையோட 10 நாள்ல எடுத்துட்டு வீட்ட காலி பண்ணிட்டு போயிட்டாங்க

2ஆவது திருச்செந்தூர், 3ஆவது திருப்பரங்குன்றம் என பதிவற்ற திருமணங்களை செய்து ஏமாற்றுவதாக கூறி பட்டதாரி பெண் மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த இளைஞர்.

அவங்க போன்ல பாய்ஸ் நம்பர்தான் இருக்கும் கேர்ள்ஸ் யாருமே ப்ரண்டா இல்லை என மாலை மாற்றிய போட்டோவுடன் பட்டதாரி பெண்ணை தேடிவந்த வீட்டோட மாப்பிள்ளை.

நீண்ட வருடம் காத்துகிடந்த 90ஸ் கிட்ஸ் மாப்பிள்ளைக்கு சொந்தம் என கூறி தேடிவந்த நேசம் – நீடிக்காத சோகம் – சேதாரம் ஆன பாவம்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி இவர் கடந்த 13 ஆண்டுகளாக வெளிநாடுகளில் பணி செய்துவந்துள்ளார்.

இதனால் 38 வயதாகியும் திருப்பதிக்கு திருமணம் ஆகாத நிலையில் தனது தங்கையின் உறவினர்கள் மூலமாக ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்த பட்டதாரி பெண்ணை 2 ஆவது திருமணம் செய்யலாம் என கூறி மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற பட்டதாரி இளம்பெண்ணை சம்பந்தம் பேசியுள்ளனர்.

அப்போது வீட்டோடு மாப்பிள்ளையாக தான் இருக்க வேண்டும் என பெண் வீட்டார் கூறியபோது திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சு சான்ஸ்சுனு நெனச்சு படுகுஷியில் இருந்த திருப்பதி

முத்துலெட்சுமிக்கு வரதட்சணை வாங்காமல் தான் சம்பாதித்த தங்க நகைகளை அணிவித்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த ஆண்டு குடும்பத்தினர் முன்னிலையில் தாலி கட்டி மாலை மாற்றிய கையோடு , உறவினர்களுக்கு தடபுடல் விருந்தினை கொடுத்த பின்னர் மதுரைக்கு பெண் வீட்டிற்கு வந்துள்ளார்.

கல்யாணம் ஆகாமல் அப்செட்டில் இருந்த தனக்காக தன்னோடு வாழ வந்த என் முத்துவுக்கு தான் என் உடல், உயிர், பணம் ,நகை சம்பாதித்தது எல்லாமே என கூறி வாழ்ந்துவந்துள்ளார்.

10 நாட்கள் தடபுடலாக விருந்து , புத்தாடை , புது சினிமா , ஹனிமூன் என உற்சாகத்தில் முத்துவோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்த திருப்பதிக்கு சில நாளில் முத்துலெட்சுமியின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்துள்ளது.

அப்போது திருமணத்தை பதிவு செய்துவிடுவோம் என முத்துலெட்சுமியிடம் கேட்டபோது முதல் கணவர் உயிரிழந்ததால் விதவைசான்று வைத்துள்ளேன் அதன் மூலமாக நான் அரசு வேலை வாங்கிடுவேன் அதன் பின்னர் பதிவு செய்வோம் என கூறியதோடு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அழைத்துசென்று அங்குள்ள அதிகாரி ஒருவரையும் திருப்பதியிடம் பேசவைத்து நம்பவைத்துள்ளார்.

இதனையடுத்து மனைவிக்காகவும் அவரது முதல் பிள்ளைக்காவும் சம்பாதிக்க வேண்டும் என கூறி 90 நாள் முடிந்து பாரினுக்கு மீண்டும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து ஒரு வாரமாக பேசி திருப்பதியின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுத்து செலவு செய்துவந்த பின்னர் திருப்பதியின் போன் பண்ணியும் அவருக்கு பதில் அளிக்கவில்லை பின்னர் திருப்பதியின் போன் நம்பரையும் ப்ளாக் செய்துள்ளார்.

இதனை அடுத்து திருப்பதியின் தாயாரிடம் தனது மனைவி வீட்டிற்கு சென்று பார்த்து வருமாறு கூறியதை அடுத்து திருப்பதியின் தாயார் முத்துலட்சுமியின் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்த போது உங்கள் மகனை நான் பதிவு திருமணம் செய்யவில்லை எனவும் நான் அவருடன் வாழ முடியாது எனவும் கூறியுள்ளார் மேலும் என்னை பணம் கேட்டால் நான் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்

இதனை திருப்பதியிடம் அவரது தாயார் கூறியவுடன் மீண்டும் மதுரைக்கு வந்த திருப்பதி தனது மனைவியின் முத்துலட்சுமியை வீட்டிற்கு தேடிச்சென்ற போது வீட்டை காலி செய்து சென்று விட்டதாக கூறியுள்ளனர் மேலும் பல்வேறு பகுதிகளிலும் தான் தாலி கட்டிய பெண்ணான முத்துலட்சுமி தேடியபோதும் கிடைக்காத நிலையில் அவர் குறித்து அவரது உறவினர்களிடம் விசாரித்த போது சென்னையில் சக்திவேல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து அங்கு குடியேறிவிட்டதாகவும் கூறியுள்ளனர்

இதனால் மனம் நொந்து போன திருப்பதி பாதியில் வந்த லட்சுமி நம்பி முத்துலட்சுமியும் கொடுத்து விட்டோம் என புலம்பி சென்றபடி மதுரை மாவட்ட மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முத்துலட்சுமிக்கு மாலை மாற்றியது தாலி கட்டியது ஆகிய புகைப்படங்களோடு வந்து புகார் மனு அளித்தார்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி : தான் திருமணம் செய்த முத்துலட்சுமி என்ற பெண் தன்னை ஏமாற்றிவிட்டு தான் சம்பாதித்த 13 லட்சம் ரூபாய் பணமும் 17 பவுன் நகையையும் ஏடிஎம் கார்டையும் எடுத்துச் சென்று விட்டார் எனவும்

இரண்டாவதாக திருமணம் செய்த என்னை விட்டுவிட்டு மூன்றாவதாக சக்திவேலோடு சென்னைக்கு சென்று விட்டார் எனவும் , முத்துலட்சுமியின் முதல் கணவர் தற்கொலை விவகாரத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் ,முத்துலட்சுமி தொடர்ந்து இதேபோன்று ஆண்களை ஏமாற்றி வருகிறாரா? என்ற சந்தேகம் உள்ளதால் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் , முத்துலட்சுமிக்கு செல்போனில் ஆண் நண்பர்களுடைய எண்கள் மட்டுமே இருக்கும் எப்போதும் கையிலே போனோடு, லேப்டாப்போடு தான் இருப்பார் ஐடியில் வேலை பார்க்கிறேன் எனக்கூறி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்

என்னை இரண்டாவது திருமணம் செய்துவிட்டு தற்பொழுது மூன்றாவது நபரோடு சென்னைக்கு சென்று விட்டார் முத்துலட்சுமி மூன்றாவதோடு நின்று விட்டாரா அடுத்தடுத்து இதேபோன்று இளைஞர்களை ஏமாற்றுகிறாரா? என்ற சந்தேகம் உள்ளதால் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி தன்னுடைய பணம் மற்றும் நகைகளை மீட்டுத் தருமாறு தெரிவித்தார்.

இரண்டாவது திருமணமாக திருச்செந்தூரில் முருகன் கோவிலில் என்னை திருமணம் செய்துவிட்டு மூன்றாவது திருமணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சக்திவேலை திருமணம் செய்துவிட்டு சென்றுள்ளார்

விதவை என்ற காரணத்தை கூறி கோவில்களில் திருமணம் செய்துவிட்டு அதனைப் பதிவு செய்ய விடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் முத்துலட்சுமி பணத்தை எடுத்து சென்று விட்டார் என புலம்பித் தவித்தார்

வீட்டோட மாப்பிள்ளை என்று சொல்லி கல்யாணம் பண்ணி வச்சு கட்டுன முத்துலட்சுமியவும் காணோம்,் பாடுபட்டு உழைச்ச 15 லட்சமும், 17 பவுன் தங்கத்தையும் காணோம் என மனதில் வேதனையோடு தொலைத்த முத்துலட்சுமியை தேடி வருகிறார் திருப்பதி

What do you think?

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தும் MNI கான்கிளேவ் 2024

நாமக்கல் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் பண்டிகை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி