புதுச்சேரியில் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட இருசக்கர வாடகை வாகனம். துணிகடையில் வியாபாரம் செய்யமுடியதாதால் உரிமையாளர் காவல் துறையை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.
சுற்றுலா தலமாக விளங்கிவரும் புதுச்சேரி மாநிலத்திற்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. வெளிமாநிலம் வெளி ஊர்களிலிருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆங்காங்கே இருசக்கர வாகன வாடகை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மிஷன் வீதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து இருசக்கர வாடகை வாகனங்கள் நிறுத்தி வைத்து வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.. அப்பகுதியில் துணி கடைக்கு எதிரே துணி கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் கடையின் வாசலிலேயே வாடகை இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனை கண்டித்து ஆட்சியர் மற்றும் காவல்துறைக்கு பல தடவை புகார் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லையா குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது..
இதனால் துணி கடை வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி உரிமையாளர் திடீரென தனது கடையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு சக்கர வாடகை விடும் நபர்கள் அந்த வாடகை இருசக்கர வாகனத்தை கடையின் முன்பு வரிசையாக நிறுத்தி இருப்பதால் வழியில்லாமல் உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களுக்கு வழியை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறையிடமும், துணைநிலை ஆளுநரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்துப்பாடில்லை இதனால் ஆத்திரம் அடைந்த கடையின் தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்து சம்பந்தப்பட்ட வண்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்…
சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரத்தை தடுக்கும் நோக்கில் ஈடுபடும் நபர்களை போராட்டம் நடத்தி தான் நியாயம் கேட்க வேண்டிய நிலை ஏற்படும் சூழல் உள்ளது.. எனவே தானாக போக்குவரத்து காவல்துறை முன்வந்து நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்யும் நபர்களை கடுமையாக தண்டனை உட்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது….