in

அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட வினை தீர்க்கும் விநாயகர் ஆலயம்

அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட வினை தீர்க்கும் விநாயகர் ஆலயம்

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் காந்திநகர் வீட்டுமனையாக பிரிக்கப்பட்ட பொழுது பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கடந்த 32 வருடங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் வினை தீர்க்கும் விநாயகர் ஆலயத்தை கட்டிவழிபாடு செய்து வந்தனர்.

இந்நிலையில் குண்டூர் ஊராட்சியில் விஸ்தரிப்புகள் அதிகரிக்கவே காந்தி நகர், கணபதி நகர், அய்யனார் நகர் உட்பட பல்வேறு விஸ்தரிப்புகள் என சுமார் 3,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இதனால் வினை தீர்க்கும் விநாயகர் கோவிலானது அந்த பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கியது.

இந்த ஆலயத்தில் விநாயகர், முருகன், பைரவர், நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் குடி கொண்டிருந்தது அதற்கு அன்றாட அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்தசில மாதத்திற்கு முன்பு நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த சாந்தி என்பவர் குண்டூர் காந்திநகர் பகுதியில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோவில் காந்திநகர் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி கடந்த செப்டம்பர் மாதம் 7 தேதிக்குள் குண்டூர் ஊராட்சி காந்தி நகர் பகுதியில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோவிலை அகற்றுவதற்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா வந்ததால் அந்த பணி நிறுத்தப்பட்டது இதற்கிடையில் கடந்த மாதம் 12ஆம் தேதி
அந்த வினை தீர்க்கும் விநாயகர் கோயிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் தாசில்தார் செயபிரகாத்திடம் வினை தீர்க்கும் விநாயகர் கோவில் வார வழிபாட்டு மன்றத்தைச் சேர்ந்த ஆன்மீக வாதிகள் மற்றும் இந்து அமைப்பினர் கோயிலை இடிக்க கூடாது அதற்கு வேறு ஒரு நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கு ஒரு நல்ல தீர்வினை எட்டித் தர வேண்டும் என தாசில்தாரிடம் கோரிக்கை வைத்தனர்.

அவர் தன்னால் எதுவும் இயலாது என்றும் நீதிமன்ற உத்தரவுபடி நாங்கள் நடந்து கொள்ள வேண்டும் அதனால் நீங்கள் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வினை தீர்க்கும் விநாயகர் கோவில் வார வழி மட்டுமன்றத்தினர் மற்றும் காந்தி நகரை சேர்ந்த நகர் நலச் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வினை தீர்க்கும் விநாயகர் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் அந்த மனு விசாரணைக்கு இன்னும் எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் சாந்தி மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறியதை தொடர்ந்து தனி நீதிபதி கடந்த 18ஆம் தேதி அதிரடியாக உத்தரவிட்டார்,

வினை தீர்க்கும் விநாயகர் கோவிலை உடனடியாக இடித்து அப்புறப்படுத்திவிட்டு வரும் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் நான்கு நாள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிரடியாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை குண்டூர் காந்தி நகரில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் ஆலயத்தை இடிப்பது என அரசு அதிகாரிகள் முடிவு செய்ததோடு சம்பவ இடத்திற்கு அதிகாலை 3.30 மணி அளவில் திருச்சி ஆர்டிஓ அருள், திருவெறும்பூர் தாசில்தார் செயப்பிரகாசம், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் இரண்டு இரண்டுஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வினை தீர்க்கும் விநாயகர் ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கினர் பின்னர் அதனை இரண்டு லாரிகளில் அப்புறப்படுத்தினார்கள்.இந்தப் பணியானது அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி காலை 7:30 மணிக்கு முடிந்தது.

இந்த நிலையில் கோவிலை இடிக்கும் பொழுது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை இருந்ததால் பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பி கோடிலிங்கம் மற்றும் கோபால சந்திரன் ஆகியோர் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

What do you think?

திருச்சி அதிமுக பொதுக்கூட்டத்தில் நகைச்சுவையாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரால் கூட்டத்தில் சிரிப்பலைகள்

யாருமே அவர்களை கடவுளாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்தும் என தெரிவித்தார்.