திருவண்ணாமலை மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் திருக்கார்த்திகை தீப திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு வசதியாக டிசம்பர் 17க்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தவர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அரசின் அனைத்து துறை செயல்பாடுகள் குறித்த அதிகாரிகளும் பங்கு பெற்றதாகவும்.
அரசு பணிகளில் சுணக்கங்கள் காணப்படும் இடங்களில் விரைவாக முடிக்க அறிவுறுத்தி இருப்பதாகவும்.
எந்தெந்த துறைகளில் சிறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு உள்ளவர்களை பாராட்டி இருப்பதாகவும்.
சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் தீட்சிதர்கள் தங்களை கடவுளாக நினைத்துக் கொள்ளக் கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கு பதில் அளிக்கையில்.
யாருமே அவர்களை கடவுளாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்தும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தி மாதம் கொண்டாடப்படுவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தவர்.
தொடர்ந்து தமிழ் வருடப்பிறப்பு தெலுங்கு வருடப்பிறப்பு என்று இருக்கும் போது இந்திக்கான வருடப்பிறப்பு ஏன் கொண்டாடக்கூடாது என கேட்கிறார்களே என்று செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் இந்தி மாதம் கொண்டாட கூடியவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு கொண்டாடிக் கொள்ளட்டும் என்று தெரிவித்தவர்.
தமிழிசை சௌந்தர்ராஜன் ஹிந்தியை திமுக அரசியலாக்க பார்க்கிறது என்ற கேள்விக்கு பதில் அளிக்கில் அவர்கள் வேறு ஒரு மாநிலத்தின் ஆளுநர் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கருத்து சொல்லி விட்டு செல்கிறார்கள் அதற்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை என்று தெரிவித்தார்..