in

வத்தலகுண்டில் இரண்டு மாடி வீடு திடீரென இடிந்து விழுந்தது பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு

வத்தலகுண்டில் இரண்டு மாடி வீடு திடீரென இடிந்து விழுந்தது பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இரண்டு மாடி வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது நல்வாய்ப்பாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

வத்தலகுண்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனிடையே மேலமந்தை தெருவை சேர்ந்த செல்லதுரை என்பவர் குடும்பத்தினருக்கு சொந்தமான 40 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடி வீடு உள்ளது வீடு பழுதடைந்து காணப்பட்டதால் கடந்த சில வருடங்களாக அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என தெரிகிறது
இந்நிலையில் பழுதடைந்த வீடு திடீரென நொறுங்கி இடிந்து விழுந்தது வீடு இடிந்து விழுந்து புகை மண்டலமாக காணப்பட்ட நிலையில் அப்பகுதியில் குடியிருப்போர் அதிர்ச்சி அடைந்தனர்

வீடு இடிந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இரு சக்கர வாகனங்கள் அப்பளம் போல் நொறுங்கின சம்பவம் நடைபெற்ற நேரத்தில்
அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

இதனை அடுத்து அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன

சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

What do you think?

ஆழ்துளை கிணறை ஆக்கிரமித்து பயன்படுத்த விடாமல் தடுக்கும் தாசில்தார் மீது நடவடிக்கை பொதுமக்கள் திடீர் போராட்டம்

அரசின் தொகுப்பு வீடு மேற்கூறை இடிந்து விழுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த இருவர் காயம்