மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்த மாதத்தை ‘பிங்க் மாதம்’ என்றும் அழைக்கிறார்கள். திருச்சி ஜீவிஎன் கேன்சர் இன்ஸ்டியூட்டில் இருந்து கிஆபெ விசுவநாதன் மேல்நிலைப் பள்ளி வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் 1000 க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் 8ல் ஒரு பெண்ணிற்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதனை ஆரம்பத்தில் கண்டறிந்தால் உயிரிழப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
40 வயதிற்கு மேல் உள்ள அனைத்து பெண்களும் மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இதன் மூலம் 95 சதவீதம் மார்பக புற்றுநோயிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்று ஜிவிஎன் கேன்சர் இன்ஸ்டிட்யூட் புற்றுநோய் மருந்தியல் நிபுணர் மருத்துவர் அருண் சேஷாசலம் தெரிவித்தார்.