in

‘நீல கலரில்’ ஜொலித்த அலை இன்று பச்சை நிறமாக மாறியுள்ளது

‘நீல கலரில்’ ஜொலித்த அலை இன்று பச்சை நிறமாக மாறியுள்ளது

 

புதுச்சேரியில் கடல் நீர் நேற்று நீல நிறம் மற்றும் இன்று பச்சை நிறத்தில் மாற்றம். கடல் உள் வாழினமான ஜெல்லி மீன் மற்றும் கொடிய கடல் பாம்பு கடற்கரை பரப்பில் கரை ஒதுங்கியது. சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் புதுச்சேரி கடற்கரைக்கு வருகை தருவதற்கு அச்சம். எந்த நிகழ்வுக்கும் அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம்…

கடந்த இரண்டு தினங்களாக சென்னையிலிருந்து புதுச்சேரி வரை கடல் நீர் இரவு நேரத்தில் நீல நிறத்தில் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் நேற்று இரவு ‘நீல கலரில்’ ஜொலித்த அலை இன்று பச்சை நிறமாக மாறியுள்ளது. கடல் நீர் தொடர்ந்து மாறிவரும் நிகழ்வுகளால் பொதுமக்களிடையே பீதி அடைந்துள்ளனர். கடல் நீரில் மட்டும் பச்சை நிறமாக காணப்படவில்லை அதனுடைய அழுக்குகள் கரை ஓரத்திலும் படிந்து வருவதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் கரையில் கால் வைப்பதற்கும் பயந்து வருகின்றனர்…

இந்த நிலையில் ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள், தற்போது புதுச்சேரி கடற்கரை பகுதியில் காணப்படுகிறது. மேலும் பெரிய வட்ட வடிவில் ஜெல்லி மீன்கள் கரை ஓரத்தில் இறந்து கிடைக்கின்றது… இதனால் கடலில் குளிக்கும் நபர்கள் மீது ஒட்டுவதால் தழும்பு மற்றும் அரிப்பு ஏற்படுவதாக புகார்…. கடற்கரை பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது…

மேலும் திருக்கை மீன் குஞ்சுகள், நண்டுகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளதால் பரபரப்பு….

பார்ப்பதற்கு நுங்கு வடிவிலோ, கண்ணாடி நூலிழையைப் போலவோ இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதானை பஞ்சு எனவும், ஒருவகைப் பாசி எனவும் நினைத்தும் அதனை தொட்டு ரசித்தனர். குழந்தைகள் அதனை கையில் எடுத்தும் விளையாடினர்.

இதனால் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கும் அலர்ஜியை ஏற்படுத்தியது. ஜல்லி மீன்கள் கடித்த உடன் கை, கால்களில் தடுப்பு மற்றும் ஊறல் ஏற்பட்டு சிவப்பு நிறமாகி விடுகிறது. தீப்பட்டது போல எரிச்சலையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனால் கடலில் குளிக்கும் போதும், கால் நனைக்கும் போதும் ஜெல்லி வகை மீன்களைக் கண்டால் அவற்றை கையால் தொட வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியும் சுற்றுலா பயணிகள் கேட்கவில்லை….

மேலும் சிறிது நேரத்தில் கடல் பாம்பு உயிருடன் கடற்கரைப் பகுதிக்கு ஒதுங்கியது. இதனால் அங்கிருந்து சுற்றுலா பயணிகள் பயத்துடன் அந்த பாம்பை பார்த்தனர்… இந்த பாம்பு கொடிய விஷம் உள்ள பாம்பு என்றும் இதற்கு மருந்து இல்லை என கூறப்படுகிறது…தொடர்ந்து புதுச்சேரி கடற்கரையில் திடீர் இந்த கடல் நீர் மாற்றத்தாலும் திடீரென கடல் உள் வாழின உயிரினங்கள் கரை ஒதுங்குவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் அச்சமடைந்து வருகின்றனர்… இது போன்ற நிகழ்வுகள் பெரும் இயற்கை சீற்றத்தை ஏற்படுத்துமா என கேள்விக்குறியாகவே உள்ளது…

What do you think?

திருக்கை மீன் குஞ்சுகள், நண்டுகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளதால் பரபரப்பு….

தீபாவளி பண்டிகையையொட்டி களைகட்டிய சண்டே மார்க்கெட் வியாபாரம்